உடனே கேஸை வாபஸ் வாங்கு.. இல்லன்னா உன்னை என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது  என பொள்ளாச்சி காமக்கொடூர கும்பலில் ஒருவரான பார் நாகராஜ் ஒரு பெண்ணிடம் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 

பொள்ளாச்சியில் இளம்பெண்களை மிரட்டி, கற்பழித்து வீடியோ எடுத்து மிரட்டி மீண்டும் மீண்டும் சீரழித்த கொடூர சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த விவகாரம் தொடர்பாக முக்கிய குற்றவாளிகளான 5 பேர் கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டனர்.  

இதற்க்கு முன்பாக வீடியோ விவகாரம் குறித்து புகார் கொடுத்த மாணவியின் அண்ணனை அதிமுக பிரமுகர் பார் நாகராஜ் தாக்கியதாக சொல்லப்பட்டது. இதையடுத்து பார் நாகராஜ்  கைது  செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார். 

இந்நிலையில், பார் நாகராஜ், ஒரு பெண்ணிடம் உடனே கேஸை வாபஸ் வாங்கிவிட்டு இல்லையென்றால் உன் கணவனை தூங்கிவிடுவேன் என மிரட்டும் ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது.  

அந்த ஆடியோவில் பேசிய நாகராஜ் ஹலோ என்னமா என்ன பண்ணிட்டு இருக்க பொள்ளாச்சியிலிருந்து பேசுறேன் யாருன்னு தெரியுதா? பார் நாகராஜ்ன்னா எல்லாருக்கும் தெரியும். என் பேரை சொல்லிதான் உன்கிட்ட பேசணுமா? கோகிலா,  பொள்ளாச்சி சம்பத் பேரில் கொடுத்த கேஸை உடனே வாபஸ் வாங்கிட்டு, நீ எடுத்த வீடியோவை  டெலிட்  பண்ணு. அத சும்மா வச்சுக்கிட்டு சீன்லாம் போடாத..  என பார் நாகராஜ் சொல்ல அதற்கு அந்த பெண், நான் ஒன்னும் வீடியோ எடுக்கவில்லையே. கேஸ் வாபஸ் வாங்கவும் முடியாது என சொல்கிறார். 

அதற்கு பார் நாகராஜ், உன் புருஷன் எங்கே வந்தாலும் நான் தூக்குவேன். திருச்சி வந்தாலும் சரி, சென்னை வந்தாலும் சரி எங்கே வந்தாலுமே அவனை நான் தூக்குறேன் உங்கள் குடும்பத்தையும் தூக்குகிறேன். நீங்க எங்கே போனாலும், என்னை ஒண்ணுமே பண்ணமுடியாது. அதனால உடனே கேஸ வாபஸ் வாங்கிட்டு ஓடிடு, நானே ஏற்கனவே பல டென்ஷன்ல இருக்கேன் உனக்கு டைம் சரி இல்ல, நான் என்ன பண்ணுவேன் ஏது பண்ணுவேன் என்று எனக்கு தெரியாது என மிரட்டுகிறார்.

நாகராஜ் மிரட்டியதும் அந்த பெண்; வாபஸ் வாங்க மாட்டோம், நீ என்ன செய்வே, அதையும் தான் பாக்கலாம் என சொல்லியிருக்கிறார். இதை ஆடியோ விவகாரம் குறித்து பேசிய பார் நாகராஜன் ஆடியாவில் பேசியது தான் இல்லை என்று  சொல்லி உள்ளார். அதுமட்டுமல்ல இது சம்பந்தமாக புகார் அளிக்க போவதாகவும் தெரிவித்துள்ளார்.