உத்திரப்பிரதேச மாநில பார் கவுன்சில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் தலைவர் தர்வேஷ் யாதவ் நீதிமன்ற வளாகத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச பார் கவுன்சில் தலைவராக தேர்வான முதல் பெண்மணி தர்வேஷ் யாதவ் கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக தான் பதவியேற்றார். இந்நிலையில் இன்று மதியம் 2.30 மணி அளவில் அவருடைய சக ஊழியரான வழக்கறிஞர் மனீஷ் ஷர்மா என்பவர் தர்வேஷ் யாதவை தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்.

பின்னர் மனிஷ் ஷர்மாவும் அந்த இடத்திலிருந்து சற்று தூரம் ஓடி சென்று தன்னைத்தானே சுட்டுக்கொல்ல முயற்சி செய்துள்ளார். அதற்குள் அங்கிருந்த போலீசார் அவரை மடக்கி  பிடித்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.

இதுகுறித்து ஆக்ரா நகர எஸ் பி பிரவீன் வர்மா தெரிவிக்கும்போது, குற்றவாளியான வழக்கறிஞர் மணீஷ் ஷர்மா முறையான அனுமதி பெற்று வைத்திருந்த துப்பாக்கியால் தர்வேஷ் யாதவை சுட்டு உள்ளார்.

மணீஷ் ஷர்மாவும், தர்வேஷ் யாதவும் கடந்த 2004ஆம் ஆண்டு முதலே ஆக்ரா நீதிமன்ற வளாகத்தில் கொடுக்கப்பட்டுள்ள அலுவலகத்தை பகிர்ந்து வந்துள்ளனர். ஆனால் கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக பார் கவுன்சில் தலைவராக புதியதாக பொறுப்பேற்ற முதல் பெண் தலைவர் தர்வேஷ் ஷர்மாவை நீதிமன்ற வளாகத்திலேயே திடீரென இப்படி சுட்டுக் கொல்ல என்ன காரணம் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என தெரிவித்து உள்ளார்.