கொரோனா தொற்று பதற்றத்தை அதிகரித்து வரும் அதேவேளை தடை செய்யப்பட்ட ஆபாச இணையதளங்களின் பார்வையாளர்கள் எண்ணிக்கை 95 சதவிகிதம் அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.

 

வீட்டை விட்டு வெளியே வராத இந்தியர்கள் தங்களின் பொழுதுபோக்கிற்கு இணைய தொடர்பை அதிகரித்துள்ளனர். அந்த இணைய தொடர்பில் அதிகம் பார்ப்பது ஆபாச வீடியோக்களே என்பதை பார்ன் ஹப் நடத்திய ஆய்வில் அம்பலமாகியுள்ளது. இளைஞர்கள் அதிகம் பொழுதுபோக்கும் இந்த ஆபாச வீடியோக்களின் இணையதள பார்வையாளர்கள் எண்ணிக்கை உலக அளவில் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளது.

கடந்த மாதத்தில் ஒப்பிடுகையில் 95 சதவீதம் பார்வையாளர்களின் வரத்து அதிகரித்துள்ளதாக அதன் தகவல் தெரிவிக்கிறது. இந்த பார்வையாளர் அதிகரிப்பு கொரோனா சமயத்தில் அதீத வளர்ச்சியை அடைந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது. அதேபோல் இந்தியா டைம்ஸ் மற்றும் பார்ன் ஹப் வெளியிட்டுள்ள தகவலின் படி இந்த ஆபாசத் தளங்களிலும் கொரோனா, கோவிட் என தேடியோர்களின் எண்ணிக்கை 15 மில்லியன் எனக் கூறியுள்ளது.

இதனால் கோரோனா ஊரடங்கால் தங்கள் வாடிக்கையாளர்களை மேலும் குஷி படுத்த பீரிமியம் இணைப்பை தளர்த்தி அனைத்தையும் இலவசமாக பார்க்க அனுமதித்துள்ளது. கடந்த மார்ச் 24 தேதி வரை இந்த இணையதளங்களின் பார்வையாளர் எண்ணிக்கை 23% அதிகரித்துள்ளது. அதே மார்ச் 27 தேதி வரை 95.3% அதிகரித்துள்ளது. இதனாலேயே இந்தியா முழுவதும் கட்டணமில்லாமல் இலவசமாக வீடியோக்களை பார்க்க அனுமதி அளித்துள்ளது.

இதில் என்னவொரு ஆச்சரியம் என்றால் பார்ன்ஹப் உள்ளிட்ட 827 ஆபாச இணையதளங்கள் இந்திய அரசால் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் பார்ன் ஹப் தகவல் படி இந்தியாவிலிருந்து 91% இந்தியர்கள் அவர்களின் தளங்களை செல்ஃபோன் மூலம் பயன்படுத்துவதாக தெரிவிக்கிறது.