சாமியார் நித்யானந்தாவை கடத்தல் வழக்கில் குஜராத் போலீசாரும், 2010 ம் ஆண்டு தொடரப்பட்ட பாலியல்  வழக்கில் கர்நாடகா போலீசாரும் தேடி வருகிறார்கள். இந்த நிலையில் நித்தியானந்த எங்கே இருக்கிறார் என்று கண்டுபிடிக்க முடியாமலும், அவருக்கு நீதிமன்ற சம்மன் நேரில் வழங்கமுடியாமலும் திணறிக்கொண்டிருந்தது கர்நாடகா போலீஸ். இதற்கிடையில், நித்தியானந்தாவுக்கான முன் ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டார் நீதிபதி குன்ஹா.

நித்யானந்தா மீது சென்னை உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் புதுப்புது புகார்கள் கூறப்பட்டு , அடுத்தடுத்து வழக்குகள் பாய்ந்ததால் நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பி ஓடினார்.அவர் ஈக்வடார் நாட்டில் ஒரு தீவை விலைக்கு வாங்கி ‘கைலாசா’ என்ற பெயரில் தனி நாடு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.

கைலாசா நாட்டில் குடியுரிமை கேட்டு 40 லட்சம் பேர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளதாக நித்யானந்தா வீடியோ வெளியிட்டார்.அவர் புதிதாக வெளியிட்டுள்ள வீடியோவில் திராவிட நாத்திகத்தை கடுமையாக விமர்சித்திருந்தார்.

 பாலியல் வழக்கில் நித்யானந்தாவை கண்டு பிடிக்க பெங்களூர் போலீசாருக்கு கர்நாடகா ஐகோர்ட்டு கெடு விதித்திருந்தது. கடந்த 18-ந்தேதியுடன் கெடு முடிந்த நிலையில் நித்யானந்தாவை கண்டுபிடிக்க சி.பி.ஐ. மூலமாக இன்டர்போல் உதவியை நாடி இருப்பதாக கர்நாடகா போலீசார் கோர்ட்டில் தெரிவித்தனர்.ஆனால் நித்யானந்தா இருப்பிடத்தை கண்டு பிடிப்பதில் பல்வேறு சட்ட சிக்கல்கள் உள்ளதாகவும், இதனால் அவரை கைது செய்ய முடியாமல் போலீசார் திணறிக் கொண்டிருந்தார்கள்.

இதுகுறித்து கர்நாடகா போலீசார் கூறுகையில், ‘நித்யானந்தாவை கைது செய்வதில் பல சட்ட சிக்கல்கள் இருப்பதால் தான் சி.பி.ஐ. மூலமாக ‘இன்டர்போல்’ உதவியை நாடி உள்ளோம்.என்றார்கள். இந்த நிலையில் நித்தியானந்தாவின் முன் ஜாமினை ரத்து செய்து கர்நாடக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடதக்கது.

TBalamurukan