கல்லூரி மாணவி உள்பட 7 பெண்களை மிரட்டி கற்பழித்தும், வீடியோ எடுத்து அவர்களை மிரட்டி உல்லாசம் அனுபத்து வந்ததஆட்டோ டிரைவரிடம் நடத்திய விசாரித்ததில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி பின்புறம் வசித்து வந்த மோகன்ராஜ் அந்த பகுதியில் ஒரு கட்சியின் ஆட்டோ தொழிற்சங்க தலைவராகவும், ஆட்டோ ஊட்டியும் வருகிறார். இவர் மீது ஆட்டோவில் சென்ற ஒரு பெண் தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அதனை வீடியோ எடுத்து தொடர்ந்து தன்னை படுக்கைக்கு அழைத்து வற்புறுத்துவதாகவும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு புகார் வர மோகன்ராஜிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அவரது செல்போனை வாங்கி பார்த்ததில் 7 பெண்களை மிரட்டி, அடித்து பலவந்தமாக உல்லாசம் அனுபவித்த வீடியோவை வைத்துள்ளார். இதுகுறித்து தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது

அதில்; கோவை, ஈரோடு, பவானி மற்றும் சேலத்தில் இருந்து 9 ,மணிக்கு பின் காகாபாளையம், இளம்பிள்ளை என்ற ஊருக்கு செல்ல பஸ் வசதி அவ்வளவாக இல்லை, இதனால் காகாபாளையம் பஸ் நிறுத்தத்தில் நிற்கும் ஆட்டோக்களிலேயே பயணிகள் வீடுகளுக்கு திரும்புவார்கள். அப்படி மோகன்ராஜ் ஆட்டோவில் வரும் பெண்களிடம் பேசி அவர்களது குடும்ப சூழ்நிலையை தெரிந்துகொண்டு,பின்னர் அவர்களுக்கு பணம் கொடுத்து உதவி செய்வதைப்போல, பேசி அந்த பெண்களை மயக்குவார்.

அவரது பேச்சில் மயங்கிய இளம் பெண்களை தனியாக தனது வீட்டிற்கு அழைத்து வந்து, அவர்களுடன் பலவந்தமாக உல்லாசமாக அனுபவிப்பார். அவர்களிடம் மிகக் கொடூரமாகவும் ஈடுபடுவார். அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளாக கல்லூரி மாணவி உள்பட 7 பெண்களை வீட்டிற்கு அழைத்துச் வந்து அவர்களுடன் உல்லாசம் அனுபவித்து அதை தனது போனில் உள்ள கேமிராவில் பதிவு செய்தது வைத்துள்ளார்.

அந்த பேனாக்களிடம் அந்த வீடியோக்களை காட்டி மிரட்டியே பலமுறைஉல்லாசம் அனுபவித்து வந்துள்ளான், அதில் அவர் பல பெண்களை மிரட்டியும், அசிங்க அசிங்கமாக திட்டியும் உல்லாசம் அனுபவிப்பது தெரியவந்துள்ளது. மேலும் இதேபோல பல பெண்களை தனக்கு இருந்த அரசியல் செல்வாக்கால் மோகன்ராஜ் காம வெறியில் சீரழித்துள்ளது தெரியவந்துள்ளது.

இதுவரை மோகன் ராஜ் 40-க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி உல்லாசம் அனுபவித்ததாகவும் பல பெண்கள், இவனது மிரட்டலுக்கும், காமவெறியில் செய்யும் கொடுமைக்கு பயந்து ஊரைவிட்டு சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.  இவன் மட்டும் அல்லாமல் இவனது  நண்பர்களுக்கும் பெண்களை விருந்தாக்கியதும், அவர்களை விபச்சார பெண் என சொல்லி சம்பாதித்தும் தெரியவந்துள்ளது.

பலாத்கார புகாரில் சிக்கிய மோகன்ராஜ் தொடர் விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டான். அவனை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தால் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.