ஆயுதங்களுடன் வந்த கும்பல்! வீட்டில் ஒளிந்த ஆட்டோ ஓட்டுநர்! நடுரோட்டில் இழுத்து போட்டு கூறுபோட்ட பயங்கரம்!

சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் அஜிசுல்லா.  ஆட்டோ ஓட்டுநர். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு ஓட்டேரியில் உள்ள தனது உறவினர் வீட்டின் அஜிசுல்லா இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருந்தார். 

auto drive brutally murder in chennai tvk

சென்னை ஓட்டேரியில் ஆட்டோ ஓட்டுநர் கொடூரமாக வெட்டி  படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. 

சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் அஜிசுல்லா.  ஆட்டோ ஓட்டுநர். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு ஓட்டேரியில் உள்ள தனது உறவினர் வீட்டின் அஜிசுல்லா இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல், அஜிசுல்லாலின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி கொலை முயன்ற போது உறவினர் வீட்டிற்குள் நுழைந்து தப்ப முயன்றார்.

இதையும் படிங்க;- பட்டப்பகலில் 18 வயது இளம்பெண் கழுத்தை அறுத்து படுகொலை... 17 வயது கொடூர சிறுவன் சிக்கினான்.. நடந்தது என்ன?

ஆனால் அந்த கும்பல் அவரை விடாமல் வீட்டில் இருந்து வெளியே இழுத்து போட்டு சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அஜிசுல்லா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரும் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். பின்னர், கொலை செய்யப்பட்ட அஜிசுல்லா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த ஆட்டோ ஓட்டுனர் மீது 4 வழக்குகள் நிலுவையில் உள்ளதால் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றதாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க;-  பொண்டாட்டி இருக்கும் போதே மாமியாரை மடக்கிய மருமகன்.. விஷயம் தெரிந்த மைத்துனர்! இறுதியில் நடந்தது என்ன?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios