கடந்த 3ம் தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் போக்குவரத்தை சரி செய்யும் பணியிலும், வாகன சோதனையிலும் காவல் உதவி ஆய்வாளர் பொன்ராஜ்  ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது, அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிக்கொண்டு அதிகவேகமாக வந்த ஆட்டோ ஒன்றை ஓரமாக நிறுத்துமாறு உதவி ஆய்வாளர் பொன்ராஜ் சைகை காட்டினார். 

சென்னை நந்தம்பாக்கத்தில் வாகன சோதனையின் போது எஸ்.ஐ. பொன்ராஜ் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற ஆட்டோ ஓட்டுநர் சுதர்சனம் (65) கைது செய்யப்பட்டுள்ளார். 

வாகன சோதனை

கடந்த 3ம் தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் போக்குவரத்தை சரி செய்யும் பணியிலும், வாகன சோதனையிலும் காவல் உதவி ஆய்வாளர் பொன்ராஜ் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது, அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிக்கொண்டு அதிகவேகமாக வந்த ஆட்டோ ஒன்றை ஓரமாக நிறுத்துமாறு உதவி ஆய்வாளர் பொன்ராஜ் சைகை காட்டினார். 

போலீஸ் மீது மோதிய ஆட்டோ

ஆனால், வேகத்தை குறைக்காமல் வந்த ஆட்டோ காவல் உதவி ஆய்வாளர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில், படுகாயமடைந்த பொன்ராஜ் தனியார் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் வீடு திரும்பினார். இது தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

சிசிடிவி காட்சிகள்

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் ஆட்டோ ஓட்டுநரை தீவிரமாக தேடி வந்தனர். இதனிடையே, படுகாயமடைந்த பொன்ராஜை டிஜிபி சைலேந்திர பாபு நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்நிலையில், சுதர்சன் என்பவரை புனித தோமையார் போலீசார் கைது செய்துள்ளனர். 65 வயதான சுதர்சன் போரூர் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும், இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் 2 பிரிவுகளிலும், மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் ஒரு பிரிவுகளிலும் சுதர்சனம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.