ATM Thief : ஏடிஎம் கொள்ளையன் துப்பாக்கி முனையில் கைது! 15 லட்சம் பணம் பறிமுதல்!

திருவண்ணாமலை, ஏடிஎம் கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளியை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். அவனிடமிருந்து 15 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
 

ATM robber arrested at gunpoint! 15 lakh cash seized!

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த ஏடிஎம் கொள்ளை வழக்கில் மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளியான ஆசிப் ஜாவித் என்பவனை ராஜஸ்தான் மாநில எல்லையில் உள்ள ஆரவல்லி மலைத்தொடர் அடிவாரத்தில் இருந்த பாழடைந்த கட்டிடத்தில் தனிப்படை போலீசார் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவனிடமிருந்து  ரூபாய் 15 லட்சம் ரொக்க பணம் மற்றும் மாருதி ஸ்விப்ட் கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தது, விமானம் மூலம் சென்னை அழைத்து வந்தனர். சென்னையிலிருந்து காவல் வாகனம் மூலம் திருவண்ணாமலைக்கு அழைத்து வரப்பட்டார்.

திருவண்ணாமலை நகரில் உள்ள தேனிமலை மாரியம்மன் கோவில் தெரு, கலசப்பாக்கம் மற்றும் போளூர் ஆகிய நான்கு இடங்களில் கடந்த பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி ஏடிஎம் இயந்திரங்களை கேஸ் வெல்டிங் மூலம் உடைத்து 73 லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்,

இந்த கொள்ளை சம்பம் குறித்து வடக்கு மண்டல ஐஜி கண்ணன் உத்தரவின் பேரில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.கார்த்திகேயன் தலைமையில் தனிப்படை போலீசார் இதுவரை எட்டு குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்து சிறையில் அடைத்துள்ள நிலையில் கொள்ளை சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளியை கடந்த ஒரு மாத காலமாக புதுடெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், ஹிமாச்சல் பிரதேசம், அசாம் ஆகிய மாநிலங்களில் தேடி வந்தனர்.



இந்நிலையில் இறுதியாக ஹரியானா, ராஜஸ்தான் மாநில எல்லையில் உள்ள ஆரவல்லி மலைத்தொடர் அடிவாரத்தில் இருந்த பாழடைந்த கட்டிடத்தில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பெயரில், திருவண்ணாமலை மாவட்ட தனிப்படையினர் அதிரடியாக துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து பிடித்து ஆசிப்ஜாவித்தை கைது செய்தனர். அவனிடமிருந்து ரூபாய் 15 லட்சம் ரொக்க பணம் மற்றும் மாருதி ஸ்விப்ட் கார் பறிமுதல் செய்த, திருவண்ணாமலைக்கு அழைந்த வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios