சென்னையில்  சினிமா உதவி  இயக்குனர் ஒருவர் பெரிய விளம்பர நிறுவனங்களுக்கு மாடலிங் பெண்களை அனுப்பும் மாடலிங் ஏஜென்சி ஒன்று நடத்தி வருகிறார். அந்த ஏஜென்சியில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இதனால் உறுப்பினர்களுக்கு ஏஜென்சியின் நடவடிக்கை குறித்து தகவல் பரிமாறும் வகையில் அவர் வாட்ஸ் அப் குரூப் தொடங்கி அதில் அனைத்து இளம்பெண்களையும் சேர்த்துள்ளார்.

ஏஜென்சி நடத்துபவர், உறுப்பினர்களாக உள்ள இளம்பெண்களிடம் பிரபல விளம்பர நிறுவனத்தில் மாடலிங்கிற்கு வாய்ப்பு வந்துள்ளதாக கூறி, ஒரு சில பெண்களை தேர்வு செய்து தனியாக அழைத்து  சென்று அவர்களிடம் சினிமா, விளம்பர படங்களில் நடிக்க வாய்ப்புகள் வாங்கி தருவதாக  ஆசை வார்த்தைக்கு காட்டி உல்லாசமாக இருந்திருக்கிறார். 

இதுபோல் 50க்கும் மேற்பட்ட இளம்பெண்களை மாடலிங் வாய்ப்பு தருவதாக கூறி தனியாக அழைத்து சென்று  சரக்கு கொடுத்து கொடுத்து உல்லாசம் அனுபவித்திருக்கிறார். அதுமட்டுமல்ல பல பெண்களை விஐபிகளுக்கு சப்ளை  செய்துள்ளாராம்.  

இந்நிலையில், மாடலிங் சான்ஸ் வாங்கித் தருவதாக சொல்லி, ஏமாற்றப்பட்ட  பெண் ஒருவர், ஏஜென்சி நடத்துபவர் வழக்கமாக அழைத்து செல்லும் இடத்தில் அவருக்கு தெரியாமல் படுக்கை அறையில்  கேமராவை ரகசியமாக  வைத்து கடந்த 3 மாதங்களாக  அந்த பெண் உடை மாற்றுவது போன்றவற்றை நிர்வாண கோலத்தில் இருப்பது போன்றவற்றை படம்பிடித்துள்ளார்.

 அப்படி எடுக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களை சம்பந்தப்பட்ட இளம்பெண், மாடலிங் ஏஜென்சி வாட்ஸ் அப் குழுவில் பதிவேற்றம் செய்து அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளார். வாட்ஸ் அப் குழுவில் வந்த ஆபாச வீடியோக்களை பார்த்த இளம்பெண்கள் ஏஜென்சி நடத்துபவர்களுடன் ஆடைகள் இன்றி ஒன்றாக இருக்கும் காட்சிகளை பார்த்து செய்வது அறியாமல் தவித்துள்ளனர். இந்த சம்பவம் மாடலிங் ஏஜென்சி நிறுவனங்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனே ஏஜென்சி நடத்துபவரால் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவரின் சகோதரருக்கு சம்பவம் குறித்து தகவல் தெரியவந்தது. 

இதனால் ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் சகோதரர் மாடலிங் ஏஜென்சி நடத்துபவரை செல்போனில்  தொடர்பு கொண்டு, எனது  தங்கச்சியின் வாழ்க்கையை அழித்து விட்டாயே என்று கேட்டுள்ளார். அதற்கு அவர், இந்த விஷயம் நமக்குள் இருக்கட்டும், வெளியில் தெரிந்தால் மற்ற இளம்பெண்களின் விவரங்கள் வெளியிட வேண்டிய நிலை ஏற்படும் என்று மிரட்டியுள்ளார். அதேபோல், வீடியோ வெளியான சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் சம்பவம் குறித்து போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்து புகார் அளிக்க உள்ளேன் என்று கூறியுள்ளார். ஆனால் அந்த உதவி இயக்குனர் எந்தவித பயமும் இல்லாமல்  உங்களுடைய அனைத்து ஆபாச வீடியோக்களும் என்னிடமே இருக்கிறது. 

அதை நான்  சோசியல் மீடியாவில் பதிவேற்றம் செய்து உங்கள் வாழ்க்கையை அழித்து விடுவேன் என மிரட்டியிருக்கிறார்.  இப்படி மிரட்டப்பட்ட ஆடியோ வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.