காதலித்து ரகசியமாக திருமணம் செய்த பெண்ணுடன் 6 வருஷமாக திருட்டு உல்லாசம் அனுபவித்த பண வெறி பிடித்த மிருகம்  வேறு பணக்கார பெண் கிடைத்த உடன் ரகசிய மனைவியை கொன்று நிர்வாணமாக்கி உப்பை கொட்டி புதைத்துவிட்டு. தப்பி ஓடிய அந்த காதலனை நிலையத்தில் வைத்து மடக்கி பிடித்த போலீஸ் நடத்திய விசாரித்ததில் மிரளவைக்கும் வகையில் கொலை செய்திருப்பதை போலீசாரையே கண்கலங்க வைத்துள்ளது.  

ரேகாமோள் என்ற அந்த பெண் தெரியாத தனமாக ராணுவத்தில் வேலை செய்யும் அகில் நாயருக்கும் மிஸ்டு கால் சென்றுள்ளது அதைப் பார்த்து போன் செய்த அகிலுக்கு எதிர் தரப்பில் பேசிய ரேகாவின் குரலில் மயங்கிய அகில்  தொடர்ந்து பேசி நட்பை வளர்த்து காதலாக மாற்றினான்.  

ரேகா மோள் கடந்த மாதம் 21ஆம் தேதி தனது தோழிகளைப் பார்க்க எர்ணாகுளம் செல்வதாக வீட்டில் சொல்லிவிட்டு போனவர் தான் அதன்பிறகு காணவில்லை. மாயமான அவரை வீட்டினர் சொந்தக்காரர்கள் வீட்டில் தேடி வந்தனர். கிடைக்காமல் போகவே போலீசில் புகார் அளித்தனர். மகளை காணாது தவித்துப்போன பெற்றோர் பூவார் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தனர். வழக்குப் பதிவு செய்த போலீசார் செல்போன் எண்ணை வைத்து , ரேகா மாயமான நாளில் அகில் என்பவரின் போன் வந்துள்ளது. கடைசியாக அம்பூரி பகுதியில் ரேகாவின் போன் சுவிட்ச் ஆஃப் ஆனது. அதே நாளில் அகில் நம்பருக்கு அடிக்கடி பேசிய எண்ணை பார்த்த போது அது ஆதர்ஷ் என்பவருக்கு சொந்தமானது என்று கண்டுபிடித்தனர்.

ஆதர்ஷை கைது செய்த போலீசார் விசாரிக்கவே, ரேகாவை கொன்று புதைத்து விட்டதாக கூறினார். அவர் கூறிய ஒவ்வொரு தகவலும் அதிர்ச்சி ரகமாக இருந்தது. ரேகாவை அம்பூரியில் உள்ள அகிலின் வீட்டின் தோட்டத்தில் குழிதோண்டி புதைத்திருப்பதாக கூறவே அங்கு சென்ற போலீசார் ரேகாவின் உடலை தோண்டி எடுத்தனர். நிர்வாண நிலையில் இருந்த ரேகாவின் உடலை சுற்றியும் உப்பை கொட்டியிருந்தனர். பார்த்த உடனே மனதை பதைபதைக்க வைத்தது. நெஞ்சை உறைய வைக்கும் இந்த கொலையை எதற்காக செய்தனர் என்று விசாரித்தனர். 

விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளது... திருவனந்தபுரம் மாவட்டம் நெய்யாற்றின் கரை அருகே உள்ள பூவார் பகுதியைச் சேர்ந்த ராஜன் மகள் ரேகாமோள்க்கும், அகில் நாயருக்கும் இடையோன காதலுக்கு அகில் வீட்டில் எதிர்ப்பு இருந்தது. காரணம், ரேகா ஏழை என்பதால் வந்த எதிர்ப்புதான். ஆனாலும் எதிர்ப்பை மீறி ரேகாவை ரகசியமாக கல்யாணம் செய்து கொண்டார். இருவரும் வீட்டிற்கு தெரியாமல் கல்யாணம் செய்து கொண்டதை மறைத்து வைத்தனர். 

இந்நிலையில், ரேகாவிற்கு எர்ணாகுளம் அருகே வேலை கிடைத்தது. அகிலும் தனது ராணுவப்பணிக்காக டெல்லிக்கு சென்றுவிட்டார். ரேகாவை முறைப்படி கல்யாணம் செய்வதாகவும் கூறி வாக்குறுதி அளித்தார் அகில். நாளடைவில் அகில் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. அதற்குக் காரணம் அகிலுக்கு ஒரு பணக்கார பெண்ணுடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இது ரேகாவிற்கு தெரியவரவேநொந்துப்போனார். அகிலை பிரிந்து வாழ  ரேகாவிற்கு விருப்பமில்லை. 

தன்னை திருமணம் செய்யாவிட்டால் தான் தற்கொலை செய்து கொள்வேன் என சொல்லியுள்ளார். ஆனாலும் அகில் கேட்பதாக இல்லை, அகிலுக்கு நிச்சயம் செய்த பெண்ணை பார்த்து  தங்களது காதல் வாழ்க்கைக்கான ஆதாரங்களையும் காட்டியதும் பிரச்சினை வெடித்தது. இதனால் அகிலுக்கு ஏற்பட்ட ஆத்திரத்தில், ரேகாவின் கதையை முடிக்க மூன்று மாதங்களுக்கு முன்பே பிளான் போட்டுள்ளார் அகில். அதற்காக தனது தம்பி ராகுல், அவரது நண்பர் ஆதர்ஷ் உடன் இணைந்து பிளான் போட்டுள்ளனர். 

இந்நிலையில் பிளான் படி ஜூன் 20ஆம் தேதி ரேகாவிற்கு போன் போட்ட அகில் அம்பூரியில் உள்ள தனது வீட்டிற்கு வரச் சொல்லியுள்ளார். தன்னோடு பேச தான் ஆசையாக வரச்சொல்கிறார் என நம்பிச்சென்ற  ரேகா, தனது தோழிகளை சந்திக்க செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு இனிப்பு பெட்டியுடன் அகிலை பார்க்கப் போனார். நெய்யாற்றின்கரை வந்த ரேகாவை வாடகைக் காரில் வந்த அகில் ஏற்றிக்கொண்டு தனது வீடு இருக்கும் அம்பூரிக்கு அழைத்துக்கொண்டு சென்றுள்ளார். போன இடத்தில் ரேகாவை மிரட்டிப் பார்த்த அகில் வார்த்தைக்கு ரேகா மசியவில்லை. தனது தம்பியுடன் ரேகாவை கழுத்தை இறுக்கி கொன்று. உடைகளை அவிழ்த்து எரித்து விட்டு, நிர்வாண உடலை குழியில் போட்டு மூடி உப்பை கொட்டி வைத்து விட்டான். 

இதனைத் தொடர்ந்து அடுத்த நாள்  வீட்டை விட்டுப்போன மகளைப் பற்றி எந்த தகவலும் இல்லாததால் தவித்த பெற்றோர் எர்ணாகுளம் சென்று விசாரித்த போது அங்கு வரவில்லை என்று தெரியவந்தது. இதனையடுத்தே போலீசில் புகார் அளித்தனர். ஆதர்ஷ் வசமாக சிக்கவே உண்மை வெளியே வந்தது. ரேகாவின் சிதிலமடைந்த சடலத்தைப் பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். 

தலைமறைவான அகில் டெல்லி சென்று ராணுவத்தில் மீண்டும் சேர்ந்திருக்கலாம் என்று போலீசார் நினைத்தனர். இதனை அடுத்து டெல்லிக்கு விரைந்த தனிப்படை போலீசார் விசாரித்த போது அங்கும் வரவில்லை என்று தெரியவந்தது. இதனிடையே ரேகா கொலைக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், தான் விரைவில் சரணடைவேன் என்றும் ஒரு தகவல் போலீசுக்கு ஒரு மெஸேஜ் வந்தது. தொடர்ந்து விசாரித்த போலீஸ் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வைத்து அகிலை கைது செய்தனர். 

ரேகாவின் சடலத்தை நிர்வாணமாக்கி உப்பை கொட்டியது ஏன்? என்று போலீஸ் விசாரித்த போது, உடல் சீக்கிரம் அழுகவேண்டும் என்பதற்காகவே நிர்வாணமாக்கி உப்பை கொட்டி புதைத்ததாகவும், உடல் புதைத்தது தெரியாமல் இருக்க பாக்கு மரங்களையும் நட்டு வைத்ததாக கூறியுள்ளான்.