ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்த ஆட்டோ ஓட்டுநர்! ஆம்ஸ்ட்ராங்கை போட்டுத்தள்ளிய கும்பல்! அடுத்தடுத்து வெளியாகும் தகவல்!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு சென்னை பெரம்பூரில் புதிதாக கட்டப்படும் அவரது வீடு அருகே மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஆற்காடு சுரேஷின் தம்பி புன்னை பாலு உள்ளிட்ட 8 பேர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஆட்டோ ஓட்டுநரும், ரவுடியுமான திருமலை என்பவர் ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தது தெரியவந்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு சென்னை பெரம்பூரில் புதிதாக கட்டப்படும் அவரது வீடு அருகே மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஆற்காடு சுரேஷின் தம்பி புன்னை பாலு உள்ளிட்ட 8 பேர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். சரணடைந்த 8 பேரையும் கைது செய்த போலீசார் இந்த கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது கூலிப்படை தலைவர் ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்கு பழியாக ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: Armstrong Murder: ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதானவர்கள் உண்மை குற்றவாளிகள் இல்லை.. திருமாவளவன் பகீர்.!
ஆனால் ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி அவரது ஆதரவாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கூறிவருகின்றனர். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக அடுத்தடுத்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
பெரம்பூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரும் ரவுடியுமான திருமலை, ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு திட்டம் போட்டு கொடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ஆம்ஸ்ட்ராங் வீடு உள்ள பகுதியில் இருக்கும் பள்ளி அருகே ஆட்டோவை நிறுத்துவது போல ஒருவாரமாக நோட்டமிட்டு வந்த திருமலை, ஆம்ஸ்ட்ராங் அடிக்கடி தான் கட்டி வரும் வீட்டருகே குறைந்த அளவிலான நண்பர்களுடன் வருவதை நோட்டமிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தலைநகரை கதி கலங்க வைத்த ஆற்காடு சுரேஷ்? இவரை கொலை செய்தது யார்? ஆம்ஸ்ட்ராங்கிற்கு என்ன தொடர்பு?
சம்பவத்தன்று ஆம்ஸ்ட்ராங் மற்றும் அவரோடு ஒரு சிலர் மட்டுமே நிற்பதை பார்த்த திருமலை இந்த தகவலை போனில் தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து 6 பேர் கொண்ட கும்பல் மூன்று பைக்குகளில் வந்து கொலை செய்துள்ளனர்.