அய்யோ.. அம்மா.. காப்பாற்றுங்கள்.. பட்டப்பகலில் இளைஞர் ஓட ஓட வெட்டிப் படுகொலை.. பதற வைக்கும் CCTV காட்சிகள்.!
அரக்கோணம் பேருந்து நிலையத்தில் பட்டப்பகலில் இளைஞர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரக்கோணம் பேருந்து நிலையத்தில் பட்டப்பகலில் இளைஞர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் உள்ள பழனிபேட்டை டில்லியப்பன் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன். அவரது மகன் கோகுல் (27). இவர், நேற்று மதியம் 1.30 மணி அளவில் அரக்கோணம் புதிய பேருந்து நிலையம் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் திடீரென கோகுலை அரிவாளால் வெட்டினர். ரத்தம் சொட்ட சொட்ட அய்யோ... அம்மா... காப்பாற்றுங்கள் என உயிருக்கு பயந்து ஓடினார். தொடர்ந்து ஓட ஓட விரட்டி மர்ம நபர்கள் கோகுலின் தலையில் சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனை கண்டதும் பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகள் நாலாபுறமும் சிதறி ஓடினர். பின்னர் கொலையாளிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த நகர காவல்துறையினர் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். யார் கொலை செய்தார்கள்?, எதற்காக கொலை செய்தார்கள்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், சம்பவம் நடந்த இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து, குற்றவாளிகளை காவல்துறையினர் நான்கு தனிப்படைகளை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். அரக்கோணத்தில் பட்டப்பகலில் புதிய பேருந்து நிலையம் அருகே வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.