சிறுமியின் தாய் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், தந்தைக்கு தெரியாமல் சிறுமியை ஸ்வர்ன குமாரி அழைத்து சென்று இருக்கிறார்.
எட்டு மாதங்களுக்கும் மேலாக விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 13 வயது சிறுமியை ஆந்திர போலீசார் மீட்டுள்ளனர். இந்த சம்பவம் குண்டூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் 13 வயது மைனர் சிறுமியை கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 13 வயது சிறுமியையும் மீட்டுள்ளனர். கடந்த எட்டு மாத காலத்தில் சுமார் 80-க்கும் அதிகமானோர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது:
இந்த விவகாரத்தில் தொடர்புடையதாக பி.டெக் பயிலும் மாணவர் உள்பட பத்து பேரை கைது செய்து இருக்கிறோம் என போலீசார் தெரிவித்து உள்ளனர். மேலும் இந்த குற்றச்சாட்டில் 80 பேருக்கு தொடர்பு உள்ளது என்றும், அவர்களை பிடிக்கும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு இறுப்பதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட சிறுமியை ஸ்வர்ன குமாரி என்ற பெண் தத்தெடுத்து வளர்த்திருக்கிறார். ஸ்வர்ன குமாரி மீட்கப்பட்ட சிறுமியின் தாய்க்கு தோழி என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறுமியின் தாய், மற்றும் ஸ்வர்ன குமாரிக்கு கடந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் கொரோனா பெருந்தொற்று காலக்கட்டத்தில் மருத்துவமனையில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறுமியின் தாய் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், தந்தைக்கு தெரியாமல் சிறுமியை ஸ்வர்ன குமாரி அழைத்து சென்று இருக்கிறார்.

புகார்:
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் சிறுமியின் தந்தை காவல் நிலையத்திற்கு சென்று, தனது மகளை காணவில்லை என புகார் அளித்து இருக்கிறார். இந்த புகாரின் பேரில் போலிசார் விசாரணை நடத்தி வந்தனர். இதன் அடிப்படையில் தான் ஸ்வர்ன குமாரி இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி என போலீசார் கண்டறிந்தனர்.
இந்த வழக்கில் ஜனவரி மாத வாக்கில் முதல் நபர் கைது செய்யப்பட்டார், அதன் பின் நேற்று (ஏப்ரல் 19) குண்டூர் மேற்கு பிரிவு போலீசார் பத்து பேரை கைது செய்தனர். கைதானவர்களில் பி.டெக் மாணவரும் இடம்பெற்று இருக்கிறார். மேலும் அவர்களிடம் இருந்து சிறுமியையும் போலிசார் மீட்டனர்.
தேடுதல் வேட்டை:
இந்த வழக்கில் காவல் துறை 80 குற்றவாளிகளை கண்டுபிடித்து, அவர்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. 80 பேரில் சிலர் வழக்கின் முக்கிய குற்றவாளிகள் ஆவர். 35 பேர் இணை குற்றவாளிகள், எஞ்சி இருப்போர் வாடிக்கையாளர்கள் என கூடுதல் எஸ்.ஐ. கே. சுப்ரஜா தெரிவித்து உள்ளார்.
