ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் பட்டதாரி இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் சம்பவம் அலங்காநல்லூரில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது . வாடிவாசல் வழியாக சீறி வரும்  காளைகளின் திமில்களைப் பற்றி இளைஞர்கள் தங்களது வீரத்தை பறைசாற்றி வருகின்றனர் 

அதேநேரத்தில்  காளைகள் முட்டுவதாலும், மிதிப்பதாலும் வீரர்கள்  காயமடைந்து வருகின்றனர்.  இந்நிலையில் சோழவந்தான் சங்கங்கோட்டை தெருவைச் சேர்ந்த வீரபத்திரன் பந்தல் காண்டிராக்டர் என்பவரின்  இரண்டாவது மகன் ஸ்ரீதர் (27) இவரது நண்பரின்  காலை ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டது அப்போது காலை வெளியேறும் வழியில் ஸ்ரீதர் தன்னுடைய நண்பருடன்  காலையை  பிடித்து செல்ல காத்திருந்தார்.  அப்போது அவ்வழியே வந்த மற்றொரு காலை எதிர்பாராதவிதமாக ஸ்ரீதரை முட்டியது  இதில் ஸ்ரீதரின் வலதுபக்க வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டது . அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் ஸ்ரீதர் சரிந்து விழுந்தார் . 

இதனையடுத்து அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு  மேல் சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் ஆனால் அவர் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக ஸ்ரீதர் உயிரிழந்தார் , பிஇ சிவில் பட்டதாரியான  ஸ்ரீதர் சட்டக்கல்லூரியில் சட்டம் பயில விண்ணப்பித்துள்ள நிலையில் காளை முட்டி உயிரிழந்திருப்பது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.