மும்பையில் உள்ள  லோகமான்யா திலக் முனிசிபல் ஜெனரல்  மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு பெண் ஒருவர்  சிறுநீரக கோளாறு காரணமாக, சிகிச்சை பெற்று வருகிறார். 

அவருடன் 37 வயதான அவரது சகோதரி கூட இருந்து கவனித்து வருகிறார். இந்தப் பெண் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்.

இந்நிலையில், அந்த பெண்ணை மர்ம நபர் ஒருவர் மருத்துவமனையின் மொட்டை மாடிக்கு தூக்கிச்  சென்று, கடந்த வெள்ளிக்கிழமை இரவு  கற்பழித்துள்ளார். இதனால் அதிர்ந்து போன  பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து பெண்ணை கற்பழித்த இளைஞரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
அதில் மருத்துவமனையில் உள்ள செக்யூரிட்டி பாதுகாப்பையும் மீறி, உள்ளே நுழைந்த அந்த நபர், வார்டு பாய் போல நடித்து, குறிப்பிட்ட பெண்ணை, எச்ஐவி சிகிச்சைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, மேல்மாடிக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், அங்கே வைத்து, பலாத்காரம் செய்து விசாரணையில்  தெரியவந்துள்ளது.

 

அந்தப் பெண் பலாத்காரம் செய்யப்பட்டபோது தான் ஒரு எய்ட்ஸ் நோயாளி என்று  அழுதுகொண்டே கூறியுள்ளார்.  ஆனாலும் அந்த இளைஞர் விடாமல் கற்பழித்துள்ளார்.இதையடுத்து அந்த இளைஞரை  போலீசார் தற்போது எய்ட்ஸ் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.