மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை முந்திரி காட்டில் வைத்து கற்பழித்து கர்ப்பிணியாக்கிய அதிமுக ஒன்றிய நிர்வாகியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை அதிமுக நிர்வாகி கற்பழித்து கர்ப்பமாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சிலம்பூர் கிராமத்தை சேர்ந்த நாகராஜ். மனைவி சிவசங்கரி. இவர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு கல்யாணம் நடந்தது. இவர்களுக்கு சரண்ராஜ் என்ற 6 வயதில் மகன் உள்ளார். கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இந்நிலையில், சிவசங்கரி, தனது மகனுடன் அகரம் கிராமத்தில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். கணவரை பிரிந்து வாழ்ந்து வந்ததால் மன அழுத்தத்திற்கு ஆளான அவர் மனநிலை பாதிப்புக்கு உள்ளான இந்த பெண் இதற்காக டாக்டர்களிடம் சிகிச்சையும் பெற்று வருகிறார்.

இந்நிலையில், சிவசங்கரியின் உறவினரான ஆண்டிமடம் அதிமுக ஒன்றிய பொருளாளர் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான முந்திரி தோப்பு அப்பகுதியில் உள்ளது. அங்கு முந்திரி கொட்டைகளை பறிக்கும் பணிக்கு சிவசங்கரி சென்று வந்தார்.

கடந்த 6 மாதத்திற்கு முன்பு அவர் முந்திரி தோப்பில் கொட்டைகளை பறித்து கொண்டிருந்த சமயத்தில் அங்கு வந்த அதிமுக ஒன்றிய பொருளாளர் செல்வராஜ், சிவசங்கரியிடம் நைசாக பேசி  அவரை அங்குள்ள மறைவான பகுதிக்கு அழைத்து சென்று கற்பழித்துள்ளார். அதுமட்டுமல்ல வெளியில் யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டி பலமுறை தனது காம இச்சையை தீர்த்துக்கொண்டுள்ளார். இதனால் பயந்து போன சிவசங்கரி, நடந்த சம்பவம் பற்றி பெற்றோர் மற்றும் உறவினர்கள் யாரிடமும் கூறாமல் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் சிவசங்கரி கடந்த சில நாட்களாக மிகவும் சோர்வாக காணப்பட்டதுடன், அடிக்கடி மயக்கமும் அடைந்து வந்தார். இதையடுத்து அவரது பெற்றோர் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது டாக்டர்கள் பரிசோதித்து பார்த்த போது, சிவசங்கரி 6 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்ததுடன், இது பற்றி கேட்ட போது சிவசங்கரி நடந்த விவரத்தை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சிவசங்கரியின் தாய் பவானி, ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் செல்வராஜ் மீது கற்பழிப்பு, கொலை மிரட்டல்  வழக்குப்பதிவு செய்த போலீசார் தேடுவது தெரிந்ததும் செல்வராஜ் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.