பெட்ரோலைவிடப் பல மடங்கு எரியும் திறன் கொண்ட Hcl ஆசிட் ஏற்றிச்  ஏற்றியபடி ஒரு டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து ஆனதில் அருகில் உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் கண் எரிச்சல், தலைவலி  என கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

தூத்துக்குடியில் DCW Ltd. நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இருந்து அமில நெடி அடிக்கடி வெளியேறி, அந்த ஆலைக்கு அருகில் உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் கண் எரிச்சல், தலைவலி போன்ற பிரச்னைகளுக்கு உள்ளாவதாக பல வருடங்களாக எழுந்து வருகிறது. அத்துடன் இந்த ஆலையில் இருந்து வெளியேறும் கழிவு அமிலம் (Hcl ஆசிட் )அருகில் உள்ள நீர் நிலைகளில் கலப்பதால், அந்த தண்ணீரை குடிக்கும் கால்நடைகள் இறப்பதாகவும் தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது.

இந்த நிலையில், 21-06-2019 வெள்ளிக்கிழமை மதியம் 3.30 மணி  தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் பழைய காயல் திருப்பத்தின் அருகே,  ரட்சண்யபுரம் என்ற மீனவக் கிராமத்தையொட்டி, தாரங்கதாரா கெமிக்ல்ஸ் வொர்க்ஸ் DCW ஆலைக்கு Hcl ஆசிட் ஏற்றிச்  ஏற்றியபடி ஒரு டேங்கர் லாரி கவிழ்ந்து, அந்த லாரியில் இருந்த அமிலம் சாலை முழுவதும் கொட்டியது. போலீசார்  உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தாலும், 6 மணிக்குத் தான் மாவட்ட நிர்வாகம் ஜே.சி.பி இயந்திரத்துடன் தீயணைக்கும் வாகனத்தோடு படை வீரர்கள் வந்தனர். 

இந்த இடைப்பட்ட நேரதில், அந்த பகுதியில்வசிக்கும் கிராம மக்கள், குழந்தைகள் என சுமார் 50 பேருக்கு மேல் கண் எரிச்சல், தலைவலி , வாந்தி, உடல் அரிப்பு ஆகியவற்றுக்கு  கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் சுற்றுவட்டாரத்திலுள்ள முக்கிய சாலைகளை போக்குவரத்தை மாற்றிவிட்டுவிட்டு அருகே உள்ள குடிசை வீடுகளில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களை வெளியேற்றினர். இதனைத் தொடர்ந்து ஜே.சி.பி. மூலம் சாலைக்கு இருபுறமும் உள்ள மண்ணையும் தோண்டி வாரிப்போட்டனர்.  ஆசிட்டை அப்புறப்படுத்தும் இந்த பணியில் 
 காவல் துறையினரும், தீயணைப்புத் துறையினரும் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.  

பெட்ரோலைவிடப் பல மடங்கு எரியும் திறன் கொண்ட இந்த அசிட், வி.சி.எம்மை வெளிப்படையாக லாரிகளில் எடுத்துச்செல்வது, கடந்த 40 வருடங்களாக நடந்துவருகிறது. அதை எதிர்த்துப் பல போராட்டங்கள் கடந்த காலங்களில் நடந்துள்ளது.  ஆனால் மாவட்ட நிர்வாகமோ, ஆட்சியாளர்களோ இதுவரை கண்டனக் குரல்கள் கூட கொடுத்ததில்லை என சொல்லப்படுகிறது.