பிரியாணிக் கடை ஊழியருடன் ஏற்பட்ட  தகாத உறவால் தனது இறந்துக் குழந்தைகளையும் பாலில் விஷம் வைத்துக் கொன்றுவிட்டு தனது கணவனையும் கொலை செய்ய திட்டமிட்டிருந்த அபிராமி தனது காதலனுடன் உல்லாச மாக இருக்க வீட்டை விட்டு ஓடியுள்ளார். காவல் துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வந்தனர். அபிராமியைக் கைது செய்ய போரூர் உதவி ஆணையர் தலைமையில் மூன்று ஆய்வாளர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

அபிராமியின் செல்போன் சிக்னலை வைத்து விசாரித்த போலீஸார், கேரளா சென்ற அவரை கள்ளக்காதலனை வைத்தே நாகர்கோவில் வரவழைத்து   நேற்று  காலை நாகர்கோவிலில் கைது செய்தனர்.  சென்னைக்கு அழைத்துவரப்பட்டு, விசாரணைக்குப் பின் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தினர். பின்னர் புழல் சிறையில் அடைத்தனர்.

இதற்கு முன்னதாக அபிராமியிடன் நடத்திய விசாரணையில் பல திடுக் தகவல்கள் வெளியானது; அதில், கணவர் காலையில் வந்தால் நான் சிக்கிக் கொள்வேன் என்பதால் இது குறித்து எனது காதலன் சுந்தரத்திடம் ஐடியா கேட்டேன். உடனே  அவர் தன் வீட்டிற்கு என்னை வரச்சொன்னார். அன்று இரவு  முழுவதும் நானும் அவரும் எங்கள் ஏரியாவின் ஒதுக்கு புறமான இடத்தில் உல்லாசமாக இருந்தோம்.

விடிய தொடங்கியதும், சுந்தரம், நான் எனது வீட்டிற்கு செல்கிறேன். அப்போது தான் யாருக்கும் நம்மீது சந்தேகம் வராது. நீ உனது மொபட்டை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு சென்று  அங்கிருந்து பேருந்தில் ஏறி கன்னியாகுமரிக்கு சென்று விடு. 2 நாட்களில் நிலமை சகஜமானதும் நானும் கன்னியாகுமரி வந்து உன்னை அழைத்து செல்கிறேன் என்று கூறி என்னை அனுப்பி வைத்தான். 

ஊருக்கு செல்ல கையில் பணம் இல்லாததால் கணவன் கட்டிய தாலியை கோயம்பேட்டில் ஒரு அடகு கடையில் அடமானம் வைத்து கிடைத்த  பணத்துடன் பஸ் ஏறி கன்னியாகுமரிக்கு சென்றேன்.  ஊருக்கு கிளம்புவதற்கு முன்பாக  பயன்படுத்திய செல்போன் சிம்கார்டை வைத்து எங்கே போலீசார் தன்னை  கண்டுபிடித்து விடுவார்களோ என பயந்து செல்போன் சிம்கார்டை உடைத்து  போட்டுவிட்டேன்.

எனது இளமை வேகத்தில் காம  இச்சையை தீர்த்துக்கொள்வதற்காக நான் பெற்ற இரண்டு குழந்தைகளை  என் கைகளால் கொடூரமாக கொலை செய்து விட்டேன் என கண்ணீருடன் அபிராமி  கூறியுள்ளார்.