சென்னை குன்றத்தூர் அருகே 3-ம் கட்டளையை சேர்ந்தவர் வங்கி ஊழியர் விஜய், அவரது மனைவி அபிராமி பிரியாணிக்காரனுடன் ஏற்பட்ட முறையற்ற உறவால் தன் குழந்தைகளை இழந்து, தன் குடும்பத்தை இழந்து புழல் சிறையில் உள்ள அபிராமி சக கைதிகளின் நச்சரிப்பால் மென்டல்  டார்ச்சரில் இருக்கிராராம்.

பிரியாணிகாரனுடன் உண்டான காமக் காதலால் தனது காதல் கணவனுக்கு துரோகம் செய்துவிட்டு, பெற்ற இரண்டு குழந்தைகளையும் மாதவிடாய் மாத்திரை கொடுத்தான் கழுத்தை நெரித்துக் கொன்றும், கணவனை கொள்ளவும் துணிந்த குன்றத்தூர் அபிராமியை, கள்ளக் காதலனை வைத்து   நாகர்கோவிலில்  கைது செய்து தீவிர விசாரணைக்கு பிறகு சென்னை புழலில் உள்ள மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார். 

3 பெண்கள் தங்கக்கூடிய அந்த சிறை அறையில் முதல் நாளில் இருந்து சரியாக சாப்பிடாமலும், தூங்காமலும் அபிராமி இருந்துள்ளார். சாப்பிடுவதற்கு அழைத்து சென்றால் அங்கு கூட்டம் கூட்டமாக வந்து சக கைதிகள் வேடிக்கை பார்த்தார்களாம். அந்த அளவிற்கு ஜெயிலில் அபிராமி பிரபலமாகியுள்ளார். 

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அபிராமியுடன் இருக்கும் சக பெண் கைதிகள் அபிராமியிடம் எதற்காக நீ ஜெயிலுக்கு வந்த? என்ன தப்பு செஞ்ச என துருவி துருவி கேட்டுள்ளனர். ஆனால் அபிராமியோ எந்த பதிலும் சொல்லாமல் மவுனமாகவும் கண்கலங்கியபடியே இருந்திருக்கிறார். சரியாக சாப்பிடவும் செல்வதில்லையாம். இதனையடுத்து முதல் நாளில் ஜெயிலில் இருக்கும் பெண் காவலாளிகளிடம் விஷயத்தைக் கேட்டு தெரிந்துகொண்ட பெண் கைதிகள், அடுத்தடுத்து ஜெயிலில் இருக்கும் தொலைகாட்சியில் மற்றும் நியுஸ் பேப்பரை பார்த்து தெரிந்து கொண்ட சக கைதிகள் எதற்காக டி  உன் குழந்தைகளை  கொலை செஞ்ச? என கேட்டு நச்சரிக்கிறார்களாம்.

சக கைதிகளின் நச்சரிப்பால் பதில் சொல்ல முடியாமல் குமுறி அழுதுகொண்டு மென்டல் டார்ச்சரில் இருக்கும் அபிராமி, கடந்த இரண்டு நாட்களாக ஜெயில் வார்டனிடம் தனி சிறைக் கேட்டு அடம் பிடிக்கிராராம்.