பிரியாணி கடையில் வேலை செய்யும் சுந்தரத்துடன் ஏற்பட்ட கள்ளக்  காதலாலும் அவர் சொல்ல வார்த்தையை நம்பி தனது இரண்டுக் குழந்தைகளையும்  பாலில் விஷம் கலந்து கொலை செய்துவிட்டு கேரளாவிற்கு தப்பித்துச் சென்ற அபிராமியைக் கைது செய்ய போரூர் உதவி ஆணையர் தலைமையில் மூன்று ஆய்வாளர்கள் கொண்ட தனிப்படை  அமைத்து நாகர் கோவிலில் கள்ளக்காதலனின் உதவியுடன் கைது செய்தனர்.  கைது செய்யப்பட்ட அபிராமியை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணைக்குப் பின் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.  இந்நிலையில்,  கடந்த சில மாதங்களாக தனது கணவனை விட்டுவிட்டு பிரியாணிக்காரனிடம் தகாத உறவால் நாளுக்கு நாள் ஜாலியாக இருந்துள்ளார். கஷ்டமான நேரத்திலும் தனக்கு ஸ்கூட்டி வாங்கிக் கொடுத்த கணவனையும் விட்டுவிட்டு பிரியாணிக் காரனுடன் உல்லாச வாழ்க்கைக்கு அடிமையானார் .

தினம் தினம் ஜாலியாக டப்ஸ்மேஷ்  வெளியிட்ட இந்த வீடியோவில் அபிராமி குஜாலாக கூத்தடித்துள்ளது வெளிப்பட்டுள்ளது. அதில், கையில் நெயில் பாலிஷ் போட்டுக் கொண்டு, பார்ப்பவர்களை கவரும் விதமாக லிப்ஸ்டிக் போட்டுக் கொண்டு,ஸ்டைலீஷாக நடித்துள்ளது வெளிப்பட்டுள்ளது. தினம் தினம் ஃபேஸ்புக் ஸ்டேட்ஸ், நாளுக்கு நாள் டப்ஸ்மேஷ் என ஒவ்வொன்றாக வெளியாகி வைரலாகி வருகிறது.  

கள்ள காதலுக்காக தனது கணவர் மற்றும் பெற்ற பிள்ளைகளையே கொள்ள நினைத்த அபிராமி தற்போது சிறையில் கம்பி எண்ணி கொண்டிருக்கிறார். சிறையில் 3 பெண்களுடன் அடைக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட நாளிலிருந்து யாரிடமும் பேசாமல்,சாப்பிடாமல் இருந்த அபிராமி மெல்ல மெல்ல சிறையில் இருக்கும் சகக் கைதிகளிடம் பேச தொடங்கியுள்ளார்.  சக கைதிகளுடன் பேசிய போது அபிராமி பல திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார் என்று தெரியவந்துள்ளது. 

அதில் அவர்களுடன் பேசும் போது இந்த பாழாய் போன முயூசிகலியால் தான் என்றும், நானும் சுந்தரமும் முயூசிகலி மூலம் தான் பழக்கமானோம் என்று கூறியுள்ளார்.  அப்போது இந்த  பாழாய் போன மியூசிக்கலியால் தாம் நான் நாசமானேன். நானும் சுந்தரமும் சேர்ந்தது மியூசிக்கலில்  தான் என்றும் குமுறியுள்ளார்.  அதே போல சுந்தரம் சொல்லித்தான் என் பிள்ளைகளை கொன்றேன் என்றும் அபிராமி கூறியுள்ளார். மேலும், உன் குழந்தைகளையும் கணவரையும் கொன்றால்தான் நாம் சந்தோஷமாக வாழ முடியும் என்று சுந்தரம் தன்னிடம் கூறியதால், அவர் சொன்னதை கேட்டு என் குழந்தைகளை நானே கொன்றுவிட்டேன் என்று சக கைதிகளிடம் புலம்பியுள்ளார் அபிராமி. 

பிரியாணிக்காரன் சொன்ன அந்த ஒரு வார்த்தையை நம்பி தற்போது தனது குழந்தைகளை இழந்து நிர்கதியை நிற்கிறேன். சுந்தரம் மீது இருந்த காதல் என் கண்ணை மறைத்து விட்டது என்று சக கைதிகளிடம் அபிராமி புலம்பி வருவதாக கூறப்படுகிறது. கள்ளக் காதலனான பிரியாணிக் காரனுக்காக பிள்ளைகளை கொன்றுவிட்டு தற்போது புலம்பி என்ன பயன்.