வேலைக்கு போன மகாலட்சுமி மீது பாலியல் இச்சை.. படுக்கைக்கு அழைத்து டார்ச்சர்.. 2 குழந்தைகளை விட்டு தீக்குளிப்பு.
வேறொரு ஆணுடன் தொடர்பு படுத்தி உறவுக்காரப் பெண் அவமானப் படுத்தியதால் இரண்டு குழந்தைகளின் தாய் அவமானத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ள கொடுமை நடந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி தாய் உயிரிழந்துள்ள நிலையில் இரண்டு குழந்தைகள் பரிதவிக்கும் துயரத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
வேறொரு ஆணுடன் தொடர்பு படுத்தி உறவுக்காரப் பெண் அவமானப் படுத்தியதால் இரண்டு குழந்தைகளின் தாய் அவமானத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ள கொடுமை நடந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி தாய் உயிரிழந்துள்ள நிலையில் இரண்டு குழந்தைகள் பரிதவிக்கும் துயரத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். முழு விவரம் பின்வருமாறு:-
சென்னை அண்ணாநகர் பகுதியில் உள்ள அன்னை சத்யா நகர் 10வது தெருவில் வசித்து வருபவர் மகாலட்சுமி (26) இவரது கணவர் விஜயகுமார், தற்போது சரியான வேலை இல்லாததால், வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில் இத்தம்பதியருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். குடும்ப வறுமை காரணமாக மனைவி மகாலட்சுமி அண்ணாநகரில் உள்ள தனியார் உடற்பயிற்சி கூடத்தில் துப்புரவு பணி செய்து வருகிறார், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அதே பகுதியில் 8வது தெருவில் வசித்து வந்த அண்ணாநகர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி ராபர்ட் என்பவன் மகாலட்சுமியிடம் தரக்குறைவாக பேசியதுடன், தனது பாலியல் இச்சையை வெளிப்படுத்தியுள்ளார்.
இதையும் படியுங்கள்:மனைவிக்கு குழந்தை இல்லை.. பக்கத்து வீட்டுப் பெண்ணை இழுத்துப் போட்டு குத்திய கொடூரன்.. நடு ரோட்டில் கொடூரம்.
தனது ஆசைக்கு இணங்க வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் அதற்கு மகாலட்சுமி மறுக்கவே கணவர், குழந்தைகளை கொன்று விடுவதாகவும் மிரட்டினார், இதுதொடர்பாக மகாலட்சுமி அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார், அப்போது போலீசார் அவரை கைத் செய்து, சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் இன்று மாலட்சுமியின் கணவர் உறவினர் வீட்டுக்கு வெளியூர் சென்று இருந்தார். இந்நிலையில் அதே தெருவில் வசித்து வரும் அவரது உறவினரான அமுல் என்பவருக்கும் மகாலட்சுமிக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது அமுல் மகாலட்சுமியை ரவுடி ராபர்ட்டுடன் இணைத்து தவறாக பேசியுள்ளார்.
இதையும் படியுங்கள்: வீடு புகுந்த திருமணமான பெண்ணை உடலுறவுக்கு அழைத்த MLA உதவியாளர்.. பீர் பாட்டிலால் கழுத்தை அறுத்து கொடூரம்.
இதில் கடும் மன உளைச்சல் அடைந்த மகாலட்சுமி, தனது வீட்டுக்குள் சென்று கதவைத் தாழிட்டு உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அக்கம்பக்கத்தினர் ஒன்றுகூடி மகாலட்சுமியை மீட்டு, தீயை அணைத்து 108 ஆம்புலன்சில் அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் 90 சதவீத காயங்களுடன் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பிற்பகல் 1: 15 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிகிச்சையில் இருந்த மகாலட்சுமியிடம் எழும்பூர் மகிலா நீதிமன்ற நீதித்துறை நடுவர் வைஷ்ணவி மருத்துவமனையில் வைத்தே மரண வாக்குமூலம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.