Asianet News TamilAsianet News Tamil

இளம்பெண் படத்தை வைத்து ரூ.80 ஆயிரம் அபேஸ்... பேஸ்புக்கில் ஆட்டைப் போட்ட வாலிபர்கள் கைது

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 45 வயதான நபர் ஒருவர் அழகான பெண் என நம்பி பேஸ்புக்கில் லைக் போட்டதற்காக 80 ஆயிரம் ரூபாயை இழந்துள்ளார்.

A young girl with a picture of Rs.80 thousand Robbery...Young people arrested
Author
Tamil Nadu, First Published Oct 1, 2018, 3:46 PM IST

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 45 வயதான நபர் ஒருவர் அழகான பெண் என நம்பி பேஸ்புக்கில் லைக் போட்டதற்காக 80 ஆயிரம் ரூபாயை இழந்துள்ளார். தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் தனசேகரன் என்பவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் பேஸ்புக் தளத்தை அதிகமாக பயன்படுத்தும் பழக்கம் கொண்டவர். கடந்த சில மாதங்களுக்கு முன் அவரது பேஸ்புக்குக்கு காயத்திரி என்ற பெயரில் நட்புக்கான அழைப்பு வந்தம்.

 A young girl with a picture of Rs.80 thousand Robbery...Young people arrested

அதில் அழகான ஒரு பெண்ணின் புகைப்படம் இருந்தையடுத்து, அந்த புகைப்படத்திற்கு லைக் போட்டு, அந்த நட்புக்கான அழைப்பை ஏற்றுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து இருவரும் சமூகவலைதளத்தில் சாட்டிங் செய்ய ஆரம்பித்துள்ளனர். அப்போது ஒருமுறை தனக்கு திருமணம் ஆகி கணவர் வெளிநாட்டில் உள்ளார். இங்கு தான் மட்டும் வீட்டில் தனியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், செல்போன் எண்களை பரிமாறிக்கொண்ட இவர்கள் போனில் பேசிக்கொள்ள ஆரம்பித்தனர். A young girl with a picture of Rs.80 thousand Robbery...Young people arrested

ஒரு முறை வாட்ஸ்அப்பில் தனது சிசிச்சைக்கு பணம் தேவைப்படுகிறது. பணத்துக்காக அலைந்து கொண்டிருக்கிறேன் என்று அப்பெண் தெரிவித்துள்ளார். உடனே தனசேகரன், தான் உதவி செய்வதாக கூறியுள்ளார், உடன அப்பெண்ணும் நாகர்கோவில் வந்துவிடுங்கள் என பதில் சொல்லியுள்ளார். அதன்படி, பேருந்து நிலையத்தில் நின்ற தனசேகரனை நெருங்கிய ஒருவர், காயத்திரியின் தம்பி என்று கூறி தனசேகரனை பைக்கில் அழைத்து சென்றார்.

 A young girl with a picture of Rs.80 thousand Robbery...Young people arrested

அங்கு மேலும் ஒரு வாலிபர் இருந்தார். 2 வாலிபர்களும் சேர்ந்து தனசேகரனை தாக்கி செல்போன் மற்றும் ஏ.டி.எம். கார்டை பறித்தனர். ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ.80 ஆயிரம் எடுத்துவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றனர். இதுகுறித்து, வடசேரி போலீசில் தனசேகரன் புகார் செய்தார். அதில், பேஸ்புக் மூலம் ஒரு பெண்ணுடன் நட்பாக பழகியது முதல் பணம் பறிபோனது வரை நடந்ததை கூறினார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

 A young girl with a picture of Rs.80 thousand Robbery...Young people arrested

அதில், பொன்னுலிங்கம் (30), செருப்பங்கோடை சேர்ந்த சிவலிங்கம் (34) ஆகியோர் பெண்களின் புகைப்படத்தை பதிவிட்டு ஆண்களை ஏமாற்றுவது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios