முதல் திருமணம் ஆனதை மறைத்து தன்னை ஏமாற்றி திருமணம் செய்த பெண்ணை கொடூரமாக கணவர் கொலை செய்த சம்பம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

பஞ்சாப் மாநிலம் லுதியானாவை சேர்ந்தவர் குருசரண் சிங் என்பவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சுரிந்திரா கரு என்ற பெண்னை திருமணம் செய்துள்ளார். திருமணமான சில மாதத்திலேயே சுரிந்திரா கருவின் நடவடிக்கையில் குருசரணிற்கு சந்தேகம் எழுந்துள்ளது. 
இதையடுத்து, அவர் சுரிந்திரா கருவை பற்றி அக்கம் பக்கத்தில் விசாரிக்கையில், அந்த பெண்ணிற்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதை மறைத்து தன்னை ஏமாற்றி திருமணம் செய்துள்ளது விஷயம் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து சுரிந்திராவிடம் கேட்டபோது அவரிடம் இருந்து பிரிந்து விட்டதாகவும், தற்போது அந்த குடும்பத்துடன் தொடர்பு இல்லையெனவும் கூறி சமாதானம் செய்துள்ளார். ஆனால், சில நாட்களில் சுரிந்திராவிற்கு அவரது முதல் கணவர் மற்றும் குழந்தைகளுடன் தொடர்பு இருந்தது குருசரணிற்கு தெரியவந்தது. 

இதையடுத்து, இவர்கள் இருவருக்கும் பிரச்சனை எழுந்துள்ளது. இந்த விவகாரம் காவல்துறை வரை சென்றுள்ளது. இதை தொடர்ந்து, காவல்துறையினர் சமாதானம் நடந்த போது சுரிந்திராவிற்கு ஆதரவாக அவரது சகோதரியும் மகனும் வந்துள்ளனர். ஆனாலும், குருசரணிற்கு மனம் சமாதானம் ஆகவில்லை. இந்நிலையில் காவல்திளையத்தில் இருந்து சுரிந்திரா வெளியே வந்த போது குருசரண் அவரை கூர்மையான ஆயுதங்களை கொண்டு தாக்கினார். இதில் சுரிந்திரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.