பெங்களூருவில் IRSO விஞ்ஞானியின் கார் மீது மோதி வசைபாடிய வாகன ஓட்டுனர்! நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை உறுதி!
பெங்களூருவில் இஸ்ரோ விஞ்ஞானியின் காரை மோதிவிட்டு, தரகுறைவாக பேசிய நபர் மீது நடவடிக்கை எடுகக்கோரி சமூக வலைத்தளதம் வாயிலாக அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) விஞ்ஞானி ஒருவர், கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள தனது பணியிடத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு நபரால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. விஞ்ஞானி, ஆஷிஷ் லம்பா, இது குறித்த ட்விட்டர் வலைப்பக்கத்தில் அந்த சம்பவத்தை பதிவிட்டுள்ளார்.
அதில், தான் இஸ்ரோ அலுவலகத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, ஒரு ஸ்கூட்டரில் ஹெல்மெட் அணியாமல் ஓட்டி வந்த நபர், திடீரென தனது காரின் முன் விழ முயன்றதாக குறிப்பிட்டுள்ளார். மோதலைத் தவிர்க்க ஆஷிஷ் திடீரென பிரேக் பிடித்துள்ளார். இதனால் ஸ்கூட்டர் ஓட்டிச் சென்ற நபர், தனது காரின் முன்பு இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு தகாத வார்த்தைகளால் திட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம், காரின் டேஷ்போர்டு பகுதியில் பொருத்தப்பட்ட கேமராவில் பதிவான வீடியோ காட்சிகள் மற்றும் படங்கள் இரண்டையும் ஆஷிஷ் லம்பா பகிர்ந்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், இந்த சம்பவம் ஆக்ஸ்ட் 29ம் தேதியன்று எச்ஏஎல் சுரங்கப்பாதைக்கு அருகில் நடந்ததாக தெரிவித்துள்ளார். அந்த ஸ்கூட்டி (KA03KM8826) வாகன ஓட்டுனர், கோபத்தில் தனது காரின் டயர்களை எட்டி உதைத்தார் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆஷிஷ் லம்பாவி பதிவுக்கு பதிலளித்துள்ள பெங்களூரு காவல்துறையினர், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரியிடம் விரைவில் தெரிவிக்கப்படும் என்றும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, அந்த பதிவிற்கு நெட்டிசன்கள் பலர் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இது போன்ற விதிமீறல் நடவடிக்கைகளுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர். ஒருவர், “கைது பற்றி ஏதேனும் அப்டேட்? உள்ளதா எனவும் கேட்டுள்ளார்.
கலைஞர் காலத்தில் நடைபெறாததெல்லாம் ஸ்டாலின் காலத்தில் நடைபெறுகிறது - ஆளுநர் ராதாகிருஷ்ணன் வேதனை
"பெங்களூருவில் நாளுக்கு நாள் டன் கணக்கில் சாலை தகராறு வழக்குகள் பதிவு செய்யப்படுவதைக் கேட்க வருத்தமாக இருக்கிறது." என நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளார்.