திருடிய செல்போனில் இருந்த போஸ்புக்கில் தனது தாயின் புகைப்படத்தை பதிவிட்டு திருடன் மாட்டிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருட்டு போனில் பேஸ்புக்
மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் பங்காங்கா என்ற பகுதியில் சஞ்சய் என்ற நபர் தனது செல்போனை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து போலீசார் அந்த போனை ஒரு சில நாட்கள் கண்காணித்துள்ளனர். இதனையடுத்து திருடு போன செல்போன் குறித்து எந்த வித தகவலும் கிடைக்காமல் இருந்துள்ளது. இந்தநிலையில் போனை பறிகொடுத்த சஞ்சயின் பேஸ்புக் ஐடியில் ஒரு பெண்ணின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த போனை பறிகொடுத்த சஞ்சய் போலீசாரிடம் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.போலீசார் நடத்திய விசாரணையில் போனை திருடிய திருடன் அந்த போனில் இருந்த பேஸ்புக் பக்கத்திற்கான ஐடியை மாற்றாமல் சஞ்சயின் பேஸ்புக் ஐடியில இருந்து தனது தாயின் புகைப்படத்தை பகிர்ந்தது தெரியவந்தது. இதனையடுத்து உஷாரான போலீஸ், அந்த பெண்ணின் புகைப்படத்தை வைத்து திருடனை கண்டுபிடிக்க தொடங்கினர்.

புகைப்படத்தை பதிவிட்டு மாட்டிய திருடன்
அப்போது புகைப்படத்தில் இருந்த பெண்மனியின் வீட்டை போலீசார் கண்டறிந்தனர். இதனையடுத்து வீட்டிற்கு சென்ற போலீசார் செல்போனை திருடிய ஜாபர் என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து இரண்டு செல்போன்களையும் போலீசார் மீட்டுள்ளனர். மேலும் வேறு எந்த எந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார் என்பது தொடர்பாக போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். பேஸ்புக்கில் தனது தாயின் புகைப்படத்தை பதிவிட்டு திருடன் மாட்டிக்கொண்ட சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்
