ஒரே ஒரு "பேனா" எடுத்து சென்றதற்கு... 13 வயது  மாணவியை 10 வயது  சிறுமி அடித்தே  கொலை செய்த  திக் திக் காட்சி..! 

ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரே ஒரு விழாவிற்காக 2 மாணவிகள் போட்டுக்கொண்ட சண்டையில் ஒரு மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெய்பூர் நகரில் என்ற பட்லி என்ற கிராமத்தில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார் ஓர் சிறுமி. அவர் பள்ளிக்கு தேர்வு எழுத சென்றபோது அந்த வகுப்பறைக்கு வந்த மற்றொரு 10 வயதுடைய சிறுமி, அவருடைய பேனாவை எடுத்து சென்றுள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை ஏற்பட்டு விட்டது. பிறகு அவர் மீது சில பொருட்களை எடுத்து எரிந்து உள்ளார் மாணவி.

பின்னர் தேர்வு முடிந்தவுடன் தனது வீட்டிற்கு சென்று சீருடைகளை மாற்றி பேனாவை எடுத்து சென்ற மாணவியின் வீட்டிற்கு சென்று உள்ளார். அங்கு சென்றதும் இருவருக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் திடீரென அங்கிருந்த இரும்பு கம்பி ஒன்றை கொண்டு, 10ஆ வயது சிறுமி 133 வயது மாணவியை  தாக்கியுள்ளார். இதில் அந்த மாணவி பலத்த காயமடைந்து அழுது புலம்பியுள்ளார். மேலும் போலீசில் சொல்லிவிடுவேன் என தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக பயந்து போன அந்த மாணவி என்ன செய்வது என்று தெரியாமல் மீண்டும் ஆயுதத்தை எடுத்து தொடர்ந்து சக மாணவியை அடித்துக் கொண்டுள்ளார். பின்னர் பிளாஸ்டிக் பையால் அவரது உடலை மூடி விட்டு, பின்னர் தன் தாயாரிடம் நடந்தவற்றை தெரிவித்துள்ளார். தாயார் தன் மகளை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக உடலை எடுத்துக் கொண்டு அருகே உள்ள குளத்தில் வீசியுள்ளார். பிறகு அவருடைய கணவரிடம் இதுகுறித்து தெரிவிக்க குளத்திலிருந்து உடலை மீட்டு தொலைவான ஒரு இடத்தில் வீசிவிட்டு உள்ளனர்.

அதன் பிறகு காணாமல் போன பள்ளி மாணவியை தேடும் பணியில் இறங்கினர் போலீசார். பிறகு அவரது வீட்டில் இருந்த மாணவியின் கம்பல் மற்றும் ரத்தக்கறையை வைத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து அந்த மாணவி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த அவரது பெற்றோர்களையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் போலீசார். ஒரே ஒரு பேனாவிற்காக 13 வயது மாணவியை 10 வயது சிறுமி அடித்துக்கொலை செய்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.