மானாமதுரை அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை குரங்கு கடித்தால் அந்தச் சிறுமி பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிவங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கீழமேல்குடி கிராமத்தைச் சேர்ந்தவவர் அர்ச்சுனன். இவரது 7 வயது மகள் தீபிகா கிராமத்தில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது கிராமத்தின் அருகேயுள்ள வனப்பகுதியிலிருந்து வெளியேறி கிராமத்தில் தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தி வரும் ஆண் குரங்கு தீபிகாவை கையில் கடித்து குதறியது. 

தீபிகாவின் அலறல் சத்தம் கேட்டு ஒடி வந்தவர்கள் அங்கிருந்த குரங்கை விரட்டியடித்தனர். அதன்பின் காயமடைந்த தீபிகா மானாமதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.வனப்பபகுதியிலிருந்து வெளியேறி கீழமேல்குடி கிராமத்தில் அட்டகாசம் செய்து வரும் ஆண் குரங்கை வனத்துறையினர் பிடித்து மீண்டும் வனப்பகுதியில் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துவருகின்றனர்.