Asianet News TamilAsianet News Tamil

500 க்கு 1 மார்க் கூட குறைய கூடாது..! ட்யூஷன் டீச்சரும் பெற்ற தாயும் சின்னஞ்சிறு பெண் குழந்தைக்கு செய்த கொடூரம்...! இந்த காட்டுமிராண்டிகளை என்ன செய்யலாம்?...

அச்சிறுமியிடம் விசாரித்த போது முதலில் பயந்து எதுவும் கூறாமல் சோகமாக இருந்த சிறுமியிடம் மீண்டும் மீண்டும் விசாரித்ததில் சிறுமியின் தாயாரின் தோழி டியூஷன் சென்டர் நடத்தி வருவதாகவும் , சிறுமி அந்த டியூஷன் சென்டர் க்கு தினமும் மாலை நேரங்களில் படிக்க செல்வதாகவும் அதேபோன்று நேற்றைய தினமும் படிக்க சென்ற போது டியூஷன் சென்டரில் வைத்து தான் கடுமையான முறையில் தாக்கப்பட்டது போன்ற திடுக்கிடும் தகவல்களை சிறுமியின் மூலமாக சேகரித்த பள்ளி ஆசிரியர்கள் , பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர் . 

a small girl beaten by tution teacher
Author
Chennai, First Published Sep 21, 2019, 12:09 PM IST

வருகிற காலாண்டுத் தேர்வில் ஐந்து பாடங்களிலும் 500க்கு 500 மதிபெண்கள் எடுக்கவேண்டும் என்பதற்காக காட்டுமிராண்டித்தனத்தின் உச்சமாக அடித்துக்கொடுமைப்படுத்தியிருக்கும் செய்தி ஒன்று வலைதளங்களில் வைரலாகிவருகிறது.a small girl beaten by tution teacher

அந்தப்பதிவு இதோ,...கீழே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள புகைப்படத்தில் இருக்கும் குழந்தை , பெத்தேல்புரம் மெர்னா நினைவு மேல்நிலைப்பள்ளியில் பயின்று வருகிறது . தற்போது காலாண்டு தேர்வு நடந்து வரும் சூழலில் நேற்றைய தினம் ( 20/09/2019) காலையில் பள்ளிக்கூடம் சென்ற சிறுமி கடுமையான உடல் வலியின் காரணமாக தேர்வு எழுத முடியாமல் தவித்ததாகவும் , அச்சிறுமியிடம் விசாரித்த போது முதலில் பயந்து எதுவும் கூறாமல் சோகமாக இருந்த சிறுமியிடம் மீண்டும் மீண்டும் விசாரித்ததில் சிறுமியின் தாயாரின் தோழி டியூஷன் சென்டர் நடத்தி வருவதாகவும் , சிறுமி அந்த டியூஷன் சென்டர் க்கு தினமும் மாலை நேரங்களில் படிக்க செல்வதாகவும் அதேபோன்று நேற்றைய தினமும் படிக்க சென்ற போது டியூஷன் சென்டரில் வைத்து தான் கடுமையான முறையில் தாக்கப்பட்டது போன்ற திடுக்கிடும் தகவல்களை சிறுமியின் மூலமாக சேகரித்த பள்ளி ஆசிரியர்கள் , பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர் . a small girl beaten by tution teacher

பின்னர் பள்ளி நிர்வாகத்திடமிருந்து சிறுமியின் பெற்றோருக்கு தொலைபேசி மூலமாக அழைப்பு விடுத்து உடனடியாக பள்ளிக்கு வரும்படி கட்டளையிட்டுள்ளார்கள் . ஆதலால் சிறுமியின் தாயாரும் , தாயாரும் தோழியுமான டியூஷன் சென்டர் நடத்தி வரும் பெண்மணியும் இணைந்து சில மணிநேரங்களில் பள்ளி நிர்வாகத்தை வந்தடைந்துள்ளார்கள் , பின்னர் பள்ளி நிர்வாகம் இருவரிடமும் மாறி மாறி நடத்திய விசாரணையில் சிறுமியின் தாயார் மற்றும் தாயாரின் தோழி கூறிய பதிலை கேட்ட ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள் . காரணம் என்னவெனில் அச்சிறுமி சில பாடங்களுக்கு 100 மதிப்பெண்ணை விட சற்று குறைவான மதிப்பெண் எடுப்பதாகவும் வருகிற காலாண்டு தேர்வில் 5 பாடங்களுக்கும் சேர்த்து ஒரு மதிப்பெண் கூட குறையாமல் 500/500 எடுக்க வைக்க வேண்டும் . அதற்காக சிறுமியை என்ன செய்தாலும் பரவாயில்லை என சிறுமியின் தாயார் கூறியதாகவும் அதன் காரணமாகவே சிறுமியை இப்படி காட்டுமிராண்டி தனமாக , கொடூரமான முறையில் தாக்கியதாகவும் அசாதரணமான முறையில் பதில் கூறியுள்ளார்கள் .

இதில் முகநூல் நண்பர்கள் கவனிக்க வேண்டிய விசயம் என்னவெனில் இப்போதே பள்ளியில் படிக்கும் சிறு குழந்தைகளுக்கு இந்த நிலைமையெனில் 5, 8, 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு அரசு பொதுத்தேர்வு என்று வந்துவிட்டால் இதே போன்ற குழந்தைகளின் நிலமையை குறித்து நாங்கள் கூறி தான் உங்களுக்கு தெரியவேண்டும் என்றில்லை. ஆதலால் இக்குழந்தையை தாக்கிய டியூஷன் சென்டர் நடத்தி வரும் பெண்மணிக்கும் அதற்கு காரணமாக இருந்த தாயாரின் மீதும் தகுந்த நடவடிக்கைகள் எடுத்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் கோரிக்கையாகும் .
-முகநூலில் செலஸ்டின்ராஜ்.

Follow Us:
Download App:
  • android
  • ios