பகல் நேரம் முழுவதும் மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்ததாகவும் இரவு நேரத்தில் பெண்களை போன்று சேலை அணிந்து கொண்டு அவருக்கு பிடித்த நகைகளை அணிந்து கொண்டு உலா வருவதுவுமாக இருந்துள்ளார்.
6 மணிக்கு மேல் பெண்... பகல் முழுக்க ஆண்..! நடுராத்திரியில் சுடுகாட்டில் சடலம்..!
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சேலை அணிந்தவாறு கண்டெடுக்கப்பட்ட ஆண் சடலம் குறித்து பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
கேரள மாவட்டத்தில் உள்ளது கண்ணூர். இப்பகுதிக்கு அருகில் உள்ள சுழலி என்ற கிராமத்தில் வசித்து வந்துள்ளார் சசி என்ற நபர். இவருக்கு வயது 45. கடந்த சில மாதங்களாக வாடகை வீடு எடுத்து தங்கிய சசி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திடீரென, அப்பகுதிக்கு அருகே உள்ள வனப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அனைவரையும் பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கியது.
இந்த நிலையில் இந்த வழக்கு குறித்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி சசி பகல் நேரம் முழுவதும் மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்ததாகவும் இரவு நேரத்தில் பெண்களை போன்று சேலை அணிந்து கொண்டு அவருக்கு பிடித்த நகைகளை அணிந்து கொண்டு உலா வருவதுவுமாக இருந்துள்ளார். இருந்தபோதிலும் இவருடைய நடவடிக்கையால் அப்பகுதி மக்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் வந்தது கிடையாது.
மேலும் இதிலும் புதிதாக அடுத்த கட்டத்திற்கு சென்ற சசி, தான் வசித்து வந்த கிராமத்திற்கு அருகே உள்ள சுடுகாட்டிற்கு சென்று இரவு நேரத்தில் உறங்குவதும் காலை எழுந்தவுடன் சாதாரணமாக பேண்ட் சட்டை அணிந்து ஆணாக மரம் வெட்டும் தொழிலுக்கு சென்று விடுவாராம். இந்த நிலையில் சசியை சடலமாக மீட்டெடுக்கப்பட்ட இடத்தில் இருந்து மருந்து பாட்டில்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சசி மனதளவில் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு யாராவது சசிக்கு மருந்து கொடுத்து கொலை செய்து உள்ளனரா என பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Nov 6, 2019, 5:39 PM IST