புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கஸ்தூரி என்ற இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து ஆற்றில் வீசிய காதலன் நாகராஜ் கைது செய்யப் பட்டு பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி குலமங்களம் வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் கஸ்தூரி. இவர் ஆலங்குடியில் உள்ள ஒரு மருந்துக்டையில் வேலை செய்து வந்துள்ளார். தினமும் வேலைக்கு சென்று சரியான நேரத்தில் வீடு திரும்பும் கஸ்தூரி கடந்த 28 ஆம் தேதி வேலைக்கு சென்று வீடு திரும்பவில்லை. 

இதனை தொடர்ந்து பதற்றம் அடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்பதால், ஆலங்குடி காவல் நிலையத்தில் புகார் செய்து உள்ளனர். பின்னர், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், புதுக்கோட்டை மாவட்டம் அதிரான்விடுதியை சேர்ந்த நாகராஜ் என்ற நபருக்கும்,கஸ்தூரிக்கும்பழக்கம் இருந்துள்ளது தெரிய வந்து உள்ளது.

லோடு ஆட்டோ ஓட்டுனரான நாகராஜ், கடந்த 28 ஆம் தேதியன்று கஸ்தூரியை அழைத்துசென்றதும் தெரிய வந்து உள்ளது.மேலும் கஸ்தூரியின் உடலை ஆற்றில் தூக்கி எரிந்து விட்டு, சென்னையில் பதுங்கி இருந்த நாகராஜை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், பல தகலவல்களை தெரிவித்து உள்ளார்.

நாகராஜ் கொடுத்த வாக்குமூலம்:

ஆலங்குடி காட்டுப்பகுதிக்கு சென்று உல்லாசமா இருந்த போது கஸ்தூரிக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்து விட்டதாகவும், பின்னர் கஸ்தூரியின் உடலை ஒரு சாக்குப்பையில் கட்டி, தஞ்சை மாவட்டம் பெராவூரணி அருகே உள்ள ஆற்றில் வீசி எறிந்ததாகவும் பகீர் தகவலை கொடுத்து உள்ளார்.


 
ஆனால், கஸ்தூரியின் உறவினர்கள் நாகராஜ் சொல்வது பொய், கஸ்தூரியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து உள்ளனர் என கூறி சாலை மறியலில் நேற்று ஈடுபட்டனர்.

இந்நிலையில், போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தியதை அடுத்து நாகராஜ் கஸ்தூரியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். தனிமையில் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த போது கஸ்தூரியிடம் அத்துமீறி நடக்க முயற்சி செய்துள்ளார் நாகராஜ். மேலும் கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்டுள்ளார் அப்போது கஸ்தூரி கூச்சலிட்டுள்ளார். 

சத்தம் கேட்டு யாராவது வந்து விடுவார்களோ என எண்ணிய நாகராஜ், கஸ்தூரியின் வாயை அழுத்தமாக மூடியுள்ளார். அப்போது மூச்சு திணறல் ஏற்பட்டு கஸ்தூரி சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். 

இதனையடுத்து சடலத்தை அங்கேயே விட்டு விட்டு இரவு வரை காத்திருந்து மீண்டும் தன்னுடைய வாகனத்தை கொண்டு வந்து கஸ்தூரியின் சடலத்தை ஒரு சாக்கு பையில் போட்டு கட்டி ஆற்றில் தூக்கி வீசியது தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து நாகராஜ் மீது போடப்பட்ட சந்தேக மரண வழக்கு.. கொலை வழக்காக மாற்றி பலாத்காரம், மானபங்கம், கொலை, ஏமாற்றி அழைத்து செல்லுதல், தடயத்தை அழித்தல் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளின் கீழ் நாகராஜ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் காவலர்.

இதற்கிடையே வரும் வியாழக்கிழமை அன்று உடற்கூராய்வு செய்யப்பட உள்ளது. இதன் பின்பே இந்த சம்பவம் குறித்து கூடுதல் தகவல் தெரியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் நாகராஜ் இதே போல் பல பெண்களுடன் பழகி ஏமாற்றியுள்ளார் என கூடுதல் தகவல் கிடைத்துள்ளது.