3 வது கல்யாணம் பண்ண 2 கணவனை மர்டர் பிளான்!! விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்...
சொத்துக்காகவும், உல்லாச வாழ்க்கைக்காகவும் நடந்த இந்த கொலைகள் பற்றி விரிவான விசாரணை நடத்தி நடத்தி வருகின்றனர். தொடர்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சயனைடு கொடுத்து கொல்லப்பட்ட சம்பவம் கேரளா மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் உல்லாச வாழ்க்கைக்காக தனது இரண்டாவது கணவனையும், மூன்றாவது கள்ளக்காதலனின் மனைவியையும் கொள்ள பிளான் போட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.
சொத்துக்காகவும், உல்லாச வாழ்க்கைக்காகவும் நடந்த இந்த கொலைகள் பற்றி விரிவான விசாரணை நடத்தி நடத்தி வருகின்றனர். தொடர்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சயனைடு கொடுத்து கொல்லப்பட்ட சம்பவம் கேரளா மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் உல்லாச வாழ்க்கைக்காக தனது இரண்டாவது கணவனையும், மூன்றாவது கள்ளக்காதலனின் மனைவியையும் கொள்ள பிளான் போட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.
கேரளாவில் 6 பேரை கொன்ற ஜோளி தனது 2வது கணவரையும் கொன்றுவிட்டு 3வதாக ஒருவரை திருமணம் செய்ய திட்டமிட்டிருந்த தகவல் வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே கூடத்தாயி பகுதியை சேர்ந்தவர் ராய்தாமஸ் மனைவி ஜோளி. கடந்த 2002 முதல் 2016க்கு உள்பட்ட காலத்தில் இவரது கணவர் ராய்தாமஸ், அவரது தந்தை, தாய் உள்பட 6 பேர் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் ஜோளி, சொந்தக்காரர் மேத்யூ மற்றும் நகைக்கடை ஊழியர் பிரஜிகுமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். 3 பேரையும் 6 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. கொலை நடந்த இடங்களுக்கு 3 பேரையும் போலீசார் அழைத்து சென்று விசரணை நடத்தினர்.
அனைவருக்கும் சயனைடை உணவில் கலந்து கொடுத்தபோது தான் மிகவும் கவனமாக இருந்தேன். சயனைடை பயன்படுத்தும் போது கையில் காயம் இருந்தால் அதன் மூலம் உடலுக்குள் செல்ல வாய்ப்பு இருப்பதால், கையில் காயங்கள் இல்லை என்பதை உறுதி செய்த பிறகு நகத்தால் சயனைடை கவனமாக எடுத்து உணவில் கலந்ததாக ஜோளி போலீசில் கூறியுள்ளார்.
ஷாஜூவை திருமணம் செய்வதற்காகத்தான் தனது முதல் கணவனான ராய் தாமசையும், ஷாஜூவின் மனைவி சிலியையும் கொன்றதாக ஜோளி போலீசில் தெரிவித்திருந்தார். இதேபோல, ஜோளிக்கும், திருப்பூரில் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரியும் மலையாளியான ஜாண்சன் என்பவருக்கும் தகாத தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதை தொடர்பால் ஜாண்சனுக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இவருடன் அடிக்கடி திருப்பூர் உட்பட பல இடங்களுக்கு சென்று ஜோளி உல்லாசமாக இருந்துள்ளார்.
கட்டப்பனைக்கு செல்வதாக தனது இரண்டாவது கணவர் ஷாஜூவிடம் சொல்லிவிட்டு ஜோளி கோவைக்கு சென்று 2 நாட்கள் லாட்ஜில் ரூம் போட்டு ஜாண்சனுடன் ஒன்றாக தங்கி இருந்துள்ளார். ஜாண்சன் குடும்பத்தினருடன் ஜோளி நெருங்கி பழகி வந்துள்ளார். அவரது குடும்பத்தினருடன் சினிமாவுக்கும், சுற்றுலாத் தலங்களுக்கும் சென்று வந்துள்ளார். இந்த நிலையில் ஜாண்சனுடன் ஜோளி நெருங்கி பழகியதை கவனித்த அவரது மனைவி கணவரை எச்சரித்ததுடன், ஜாேளியுடனான தொடர்பையும் துண்டித்துள்ளார். இந்த நிலையில் தனது 2வது கணவர் ஷாஜூவை கொன்று ஜாண்சனை 3வதாக திருமணம் செய்ய திட்டமிட்டிருந்ததாக ஜோளி தெரிவித்துள்ளார்.
இதற்காக ஷாஜூவின் மனைவி சிலியை கொன்றது போல் ஜாண்சனின் மனைவியையும் கொல்ல திட்டமிட்டிருந்ததாகவும், ஷாஜூ ஆசிரியர் என்பதால் அவர் இறந்தால் அவரது பணி தனக்கு கிடைக்கும் என்று கருதியதாகவும் ஜோளி கூறியுள்ளார்.