காண்டம் அணிந்து வந்தாள் உடலுறவு கொள்ளலாம் என கறாராக பேசிய பெண்ணை வாலிபர் ஒருவர் கத்தியால்  குத்திக் கொலை செய்துள்ள சம்பவம் ,  பெங்களூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .  பெங்களூரு ராஜாஜி நகரை சேர்ந்தவர் நிரோஷா  ( பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) இவர் கணவனைப் பிரிந்து தன் குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார் .  தனக்கு முறையான வேலை ஏதும் இல்லாததால் குழந்தையை காப்பாற்ற வழி தெரியாத நிலையில் வருமானத்திற்காக பாலியல் தொழில் செய்து வந்ததாக தெரிகிறது .  இதற்காக எலக்ட்ரானிக் சிட்டி அருகில் தனியாக அறை எடுத்திருந்தார் நிரோஷா. 

இந்நிலையில் நிரோஷாவை அனுகிய  முகுந்தன் என்ற இளைஞர்  உல்லாசம் அனுபவிக்க வேண்டுமென நிரோஷாவிடம்  கேட்டுள்ளார் ,  2500 ரூபாய் கொடுத்தால் உறவு வைத்துக்கொள்ளலாம் என  நிரோஷா கூற அதற்கு முகுந்தனும் சம்மதித்தார் .  முகுந்தனை கட்டிலுக்கு அழைத்துச் சென்ற நிரோஷா பாதுகாப்பாக உடலுறவு கொள்ள வேண்டும் எனவே கண்டம் அணிந்து  கொள்ளுமாறு முகுந்தனிடம்  கூறியுள்ளார்,  ஆனால் முகுந்தன் அதற்கு சம்மதிக்காததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது உடனே அந்த பெண்ணிடம்  தான் கொடுத்த 2500 பணத்தை திருப்பிக் கொடுக்கும்படி முகுந்தன்  கேட்டு தகராறில் ஈடுபட்டார் அதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த முருகன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் நிரோஷாவை  சரமாரியாக குத்தி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார் 

இந்நிலையில் அந்த பெண்ணின் சடவத்தைக்  கைப்பற்றிய போலீசார் ,  கொலை செய்த குற்றவாளி யார் என தேடி வந்தனர் ,  இந்நிலையில் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்ததில் நிரோஷா முகுந்தனோடு  ஆட்டோவில் போவது பார்த்து குற்றவாளியை கண்டுபிடித்தனர் பின்னர் முகுந்தனை சுற்றி வளைத்து கைது செய்த போலீசார் ,  அவரிடம் நடத்திய விசாரணையில் பாலியல் உல்லாசத்திற்காக  அணுகிய தான் தான் அவரைக் கொலை செய்ததாகவும் அவர் ஒப்புக்கொண்டார் இந்நிலையில் அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு போலீசார் அவரை சிறையில் அடைத்துள்ளனர் .