இளம் பெண்ணை பின்தொடர்ந்து சென்று அவரை  கடத்தி காட்டிற்குள் தனியாக  உள்ள தனது வீட்டில் அடைத்து  வைத்து  இளைஞர் ஒருவர் ஆசைதீர அந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு  செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த இளம் பெண் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சிறுநீர் கழிக்க வயல் வெளி பக்கம் சென்றுள்ளார் .  அப்போது அந்த பெண்ணை பின்தொடர்ந்த  ஒரு நபர் அவரைப் பின்தொடர்ந்து சென்று அவரின் வாயை பொத்தி காட்டுக்குள் தனியாக உள்ள தனது வீட்டுக்கு தூக்கிச் சென்றுள்ளார் .

பின்னர் தனது வீட்டில் இரண்டு நாட்கள் அந்த பெண்ணை அடைத்து  வைத்த அந்த நபர் அந்தப் பெண்ணை நிர்வாணப்படுத்தி ,  தனக்கு தேவைப்படும் போதெல்லாம் அந்த பெண்ணுடன் உடலுறவு கொண்டுள்ளார் .  அந்தப் பெண் கத்தி கதறியும் அந்த வீடு  ஊருக்கு வெளிப்புறத்தில் இருப்பதால்  அந்தப் பெண்ணின் கதறல் சத்தம் யாருக்கும் கேட்கவில்லை .  இந்நிலையில் வெளியில் சென்ற தன் மகளை  இரண்டு  நாட்களாக தேடியும் எங்கும்  காணவில்லையே என்று பதற்றமடைந்த  அவரது பெற்றோர்கள் .  மகள் மாயமானது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் .  புகார் அளித்துவிட்டு வீடு திரும்பும்போது எதிரில் வந்த ஒரு நபர் , 

உங்கள் மகள் என்னுடைய வீட்டில் தான்  இருக்கிறாள்  எனக்கூறிவிட்டு  அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார் .  இதில் அதிர்சியடைந்த அந்த பெண்ணின்  பெற்றோர் போலீசார் உதவியுடன் அந்த நபரின் வீட்டுக்கு சென்று பார்த்தபோது,  அந்த பெண்  மயக்க நிலையில் நிர்வாண கோலத்தில்  கிடந்தார் ,  உடனே அவரை மீட்டு  சிகிச்சைக்காக அரசு  மருத்துவமனையில் அனுமதித்தனர் .  அதனை அடுத்து பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த காமக்கொடூரனை  போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் .