விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூர் மனநலம் பாதித்த பெண்னை பாலியல்  வன்புணர்வு செய்த  இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். இதே விருதுநகர் மாவட்டத்தில் கடந்த வாரம் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு பலியான நிலையில் மீண்டும் ஒரு பாலியல்  சம்பவம் இங்கு அரங்கேறியுள்ளது  அம்மாவட்ட மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.    பாலியல் குற்றத்தை  தடுக்க அரசும் காவல்துறையும் பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வந்தாலும் இக்கொடுமை  இன்னும் தீர்ந்தபாடில்லை.

சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வருவது  நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.  கடந்த சில நாட்களுக்கு முன்னர்  சிவகாசியில்  3 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி வட நாட்டு இளைஞரால் பாலியல் வன்புரண்ர்வு செய்து கொலை செய்யப் பட்டார் இச்சம்பவம் நடந்த சில நாட்களிலேயே  அதே மாவட்டத்தில் மீண்டும் ஒரு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்துள்ளது.   ஆதாவது , விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன் புத்தூர் பகுதியில் மதுரை வீரன் என்பவரது தங்கை தனலட்சுமி , (36 ) அவர் வாய் பேச முடியாத மனநலம் குன்றியவர் ஆவர் . தாய் தந்தை,   இறந்து விட்டதை அடுத்து  அண்ணன் வீட்டில் வசித்து வருகிறார் ,  இந்நிலையில் இன்று காலை அருகே உள்ள வயல் வெளிபக்கம் சென்றார் தனலட்சுமி. 

அப்போது அவரை பின்தொடர்ந்த அதே பகுதியைச் சேர்ந்த முனியாண்டி( 35) என்பவர், தனலட்சுமியை முட்புதருக்குள் இழுத்துச் சென்று உடலுறவில் ஈடுபட்டுள்ளார்.  ஆனால் தனலட்சுமி சத்தம் போடவே அங்கிருந்துவர்கள் முனியாண்டியிடமிருந்து தன லட்சுமையை மீட்டனர்.   இதைப் பார்த்த தனலட்சுமியின் அண்ணன் மனைவி லட்சுமி கத்திக் கதறியதில்  அக்கம்பக்கத்தினர் ஏராளமானோர் திரண்டனர் பின்னர் முனியாண்டியை சுற்றி வளைத்து பிடித்த அவர்கள்,   இராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முனியாண்டியை ஒப்படைத்தனர் ,அதனையடுத்து  கற்பழிப்பு வழக்கில் போலீசார் அவரை  கைது செய்தனர். மனைவியை இழந்து பிள்ளைகளுடன் வசித்து வந்த நிலையில் முனியாண்டி  இந்த செயலில் ஈருபட்டுள்ளது குறிப்பிடதக்கது.