திருத்தணியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் அருகே உள்ள உணவகம் ஒன்றில் இளைஞர் ஒருவரை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த சிசிடிவி கேமரா பதிவுகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருத்தணியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் அருகே உள்ள உணவகம் ஒன்றில், அனைவரும் உணவருந்திக்கொண்டிருக்கும் போது திடீரென உள்ளே நுழைந்த ஒரு இளைஞரை சரமாரியாக தாக்கியது ஒரு கும்பல். நான்கு பேர் அடங்கிய அந்த கும்பல் கைகளில் பயங்கர ஆயுதங்களுடன் அந்த இளைஞரை சிறிது தூரம் துரத்தி வந்துள்ளனர். பின்னர் தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக அவசரத்தில் உணவகத்திற்குள் நுழைந்த அந்த இளைஞரை மடக்கி பிடித்து கீழே தள்ளி தாங்கள் வைத்திருந்த அரிவாளால் சரவென வெட்டினர்.

இதனை கண்ட உணவகத்தில் இருந்த வாடிக்கையாளர்கள் பதற்றத்தில் அப்படியே எழுந்து அலறி அடித்துக் கொண்டு ஓடினர் கண் இமைக்கும் நேரத்தில் அந்த இளைஞரை கடுமையாகத்  தாக்கியதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து பலியாகி உள்ளார். இந்த அனைத்து காட்சியும் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. யார் அந்த இளைஞர்? எதற்காக அவரை கொலை செய்துள்ளது அந்த கும்பல்? இதற்கு பின்னணி என்ன? என்ற அனைத்து கோணத்திலும் தீவிர விசாரணையை முடுக்கி விட்டுள்ளது காவல்துறை. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.