நான்கு குழந்தைக்கு தாயான ஒருவரை ஒருதலையாக காதலித்து அவருடைய நான்காவது குழந்தையை கடத்தி வைத்து மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

டெல்லியில் மெக்கானிக் வேலை பார்த்து வரும் கமலேஷ் என்பவர் அதே பகுதியில் வசித்து வந்த நான்கு குழந்தைக்கு தாயாக உள்ள ஒரு பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.இதனை தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை அன்று அந்தப் பெண்ணின் நான்காவது குழந்தை கடைக்கு செல்வதற்காக வெளியில் வந்துள்ளார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அந்தப் பெண்ணின் தாயார் டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதன் பேரில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அந்த தெருவில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்தபோது சிறுமி ஒரு நபருடன் செல்வதை பார்க்க முடிந்துள்ளது. அதனை இந்த பெண்ணின் தாயாரிடம் காண்பித்த போது அவர் பெயர் கமலேஷ் என்பதும் தன்னை ஒருதலையாக காதலித்து வந்தார் எனவும் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் வழக்கு பதியப்பட்டு கமலேஷ் கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கமலேஷ் "நான் சில வருடங்களாக அந்த பெண்ணை காதலித்து வருகிறேன். ஆனால் அவர் அதனை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். எனவே அவர் குழந்தையை கடத்தினால் ஏற்றுக் கொள்வார்" என நினைத்து நான் இவ்வாறு நடந்து கொண்டேன் என தெரிவித்து உள்ளார்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அதே  வேளையில் கடத்தப்பட்ட சிறுமி 24 மணி நேரத்தில் மீட்கப்பட்டு தாயாரிடம் ஒப்படைக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.