பள்ளி மாணவியை கடத்தி குடகு மலையில் கொண்டாட்டம்..! ஆசிரியர் கழுத்தில் கத்தி வைத்த போது கும்மாங்குத்து வாங்கிய தரமான சம்பவம்..!  

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் என்ற பகுதியில் உள்ள ஓர் பள்ளியில் ஆசிரியரை கத்தியால் மிரட்டி மாணவியை அழைத்து செல்ல முயன்ற நபரை பிடித்து தர்ம அடி கொடுத்து உள்ளனர் பொதுமக்கள்.

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியை சேர்ந்த 15 வயது மாணவி அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த ஜெயராம் என்ற 23 வயதாகும் நபர் திடீரென மாணவி படிக்கும் பள்ளிக்கு சென்று ஆசிரியரிடம் அந்த மாணவியை தன்னுடன் அனுப்புமாறு கேட்டுள்ளார். அந்த மாணவியின் தந்தை இறந்து விட்டதாகவும் தன்னை அனுப்பி அவரை உடனடியாக அழைத்து வரச் சொன்னார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

இதில் சந்தேகம் அடைந்த ஆசிரியர் மாணவியை அனுப்ப மறுத்தார். இதனால் கோபமடைந்த ஜெயராம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆசிரியரின் கழுத்தில் வைத்து மிரட்டல் விடுத்து உள்ளார். அப்போது பயத்தில் ஆசிரியர் சப்தம் போடவே அனைவரும் ஓடி வந்து ஜெயராமை பிடித்து தர்ம அடி கொடுத்து விசாரணை செய்ததால் பல திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.

பின்னர் ஏற்கனவே இந்த  மாணவியை ஒரு தலை காதல் செய்து இருந்ததும் பின்னர் அந்த மாணவியை கடத்தி கர்நாடக மாநிலத்திற்கு சென்று ஐந்து நாட்கள் தங்கி  இருந்ததும் தெரிய வந்துள்ளது. இதன் பெயரில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ஏற்கனவே ஜெயராமை போலீசார் போக்சா சட்டத்தின் கீழ் கைது செய்து நிபந்தனை ஜாமீனில் தற்போது வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில் மீண்டும் இந்த மாணவியிடம் தகராறு செய்வதற்காக இதுபோன்ற நாடகத்தில் ஈடுபட்டு உள்ளார். இதனைத்தொடர்ந்து இரணியல் போலீசார் ஜெயராமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.