பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த கிளு கிளு ஆசாமி..! சென்னை விடுதியில் பரபரப்பு..!

சென்னையில் பெண்கள் விடுதியில் குளிக்கும்போது தெரியாமல் மறைந்திருந்து சமையல் மாஸ்டர் வீடியோ எடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை காரம்பாக்கத்தில் உள்ள பகுதியில் பெண்கள் தனியார் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் சமையல்காரராக வேங்கட பிரசாத் என்ற நபர் பணிபுரிந்து வந்துள்ளார். சமையல் செய்யும் இடத்தில் இருந்து ஒரு சுவரின் வழியாக பார்த்தால் பெண்கள் குளியலறை இருக்கும் பகுதி தெரியும். இதனை தெரிந்துக்கொண்ட வேங்கட பிரசாத் மறைந்திருந்து பெண்கள் குளிக்கும் போது வீடியோ எடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில், அவர் அடிக்கடி பெண்கள் குளிக்கும் இடத்திற்கு வெளியே நிற்பதும் நடப்பதுவுமாக இருந்துள்ளார். இதில் சந்தேகம் அடைந்த விடுதி பெண்கள் பாதுகாவலரிடம் தெரிவித்துள்ளனர். அவர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். பின்னர் இவரை அழைத்து விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கடந்த மூன்று மாதங்களாக சமையல் மாஸ்டராக வேலை செய்து வருவதாகவும் பெண்கள் குளிக்க செல்லும்போது வாய்ப்பு கிடைத்தால் அவர்களுக்கு தெரியாமல் வீடியோ எடுத்து வைத்திருப்பதாக தெரிவித்து உள்ளார்.

இதன்பேரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இவரை சிறையில் அடைத்துள்ளனர். அவரிடம் இருந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தை அறிந்த விடுதி பெண்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். யார் யாரை எப்படி எல்லாம் வீடியோ எடுத்து உள்ளனரோ..என ஒரு விதமான மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளனர்.