போன் நம்பரை பிளாக் செய்ததால் காதலியை கொலை செய்த கொடூர காதலன்...! 

விருதாச்சலம் அருகே கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவத்தில் ஒரு இளைஞர் கைது செய்யப்பட்டு உள்ளார்

பவழங்குடி என்ற கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவர் அப்பகுதியில் டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவருடைய மகள் திலகவதி தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 8 ஆம் தேதியன்று திலகவதி தன்னுடைய வீட்டில் தனியாக இருந்ததாக தெரிகிறது. அப்போது அந்த வீட்டிற்கு வந்த தன்னுடைய காதலன் திடீரென கத்தியால் குத்தி உள்ளார். இதில் திலகவதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. விரைந்து வந்து விசாரணை மேற்கொண்ட போலீசார் காதல் விவகாரத்தால் இந்த கொலை நடந்துள்ளது என்பதை கண்டுபிடித்தனர்.

இவர்கள் இருவரும் பள்ளியில் ஒன்றாக படித்து வந்துள்ளனர். தற்போது திலகவதி விருத்தாசலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பயின்று வருவதும், ஆகாஷ் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பயின்று வருவதும் தெரியவந்துள்ளது. கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமாக இருந்துள்ளதால் சமீபத்தில் சில நாட்களாக திலகவதியுடன் பேசாமல் இருந்து உள்ளார் ஆகாஷ்

இதனால் கோபமடைந்த திலகவதி அவருடைய நம்பரை தன்னுடைய மொபைல் போனில் பிளாக் லிஸ்டில் போட்டுள்ளார். இதில் கோபமடைந்த ஆகாஷ், திலகவதி வீட்டிற்கு நேரில் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். அப்போது திடீரென அருகில் இருந்த கத்தியை எடுத்து திலகவதியை சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் வேறு எந்த ஒரு பிரச்சினையும் ஏற்படாத வண்ணம் இருக்க வேண்டும் என போலீசார் தீவிர காவல் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.