தூத்துக்குடி மாவட்டம் தெய்வச்செயல்புரம் அருகேபொட்டலூரணி விலக்கு அருகே சுமார் 14 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமி உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அந்த வழியே சென்றவர்கள் சிறுமியின் முனகல் சத்தம் கேட்டு,  காவல் துறைக்கு தகவல் அளித்தனஅவர் குறித்து தகவல் அளித்தனர்.

இதையடுத்து  108 ஆம்புலன்சில் வந்த மருத்துவர்கள் குழு முதலுதவி சிகிச்சை அளித்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் குழு அச்சிறுமியை பரிசோதித்ததில் அவரை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து காட்டுக்குள் வீசியது தெரிய வந்தது.

மேலும்அவருக்கு உடல் முழுவதும் படுகாயங்கள் உள்ளன. 95 சதவீதம் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிறுமிக்கு சுய நினைவு இல்லாததால் அவர் யார் எந்தஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை.

தூத்துக்குடி மாவட்டம் புதுக் கோட்டை போலீசார் சம்பவ இடத்தில் சுற்றியுள்ள 10-க்கும்மேற்பட்ட கிராமங்களில் அவர் குறித்து விசாரித்தும் தகவல் கிடைக்கவில்லை. ஆகவே சிறுமியை வெளியூரிலிருந்து யாரும் கடத்தி வந்து பாலியல் பலாத்காரம் செய்து வீசி சென்றார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சிறுமிக்கு சுய நினைவு திரும்பியதும் பெண் இன்ஸ்பெக்டர் மூலம் விசாரணை நடத்தி குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கைது செய்யப்படுவார்கள்  என்று போலீசார் தெரிவித்தனர்.