8 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து இளம் பெண் தற்கொலை..! சென்னையில் பதற்றம்..! 

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் ஐடி பார்க்கில் பணிப்புரிந்து வந்த திருச்சியை சேர்ந்த டனிதா ஜீலியஸ் (28), என்ற பெண் ஊழியர் நேற்று இரவு பணியில் இருக்கும் பொழுது 8வது மாடியில் இருந்து விழுந்து உயிர் இழந்தார். 

நேற்று முன்தினம் பணியில் சேர்ந்த நிலையில் அந்த பெண் ஊழியர் இறந்துள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

பின்னர் அவரது உடலை கைப்பற்றி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக  அனுப்பி வைத்த அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் திருச்சியில் உள்ள அவரது பெற்றோர்களுக்கு தகவல் அளித்துள்ளனர். 

மேலும் அவர் தவறி விழுந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் அவரை தள்ளிவிட்டனரா என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.