ஆந்திர மாநிலம் கோண சீமாவில் கள்ளக்காதலனை அடைவதற்காக அவரது மனைவி மற்றும் மாமியாரை கள்ளக்காதலி பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கோண சீமாவில் கள்ளக்காதலனை அடைவதற்காக அவரது மனைவி மற்றும் மாமியாரை கள்ளக்காதலி பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் விசாரணையில் கள்ளக்காதலி அவருக்கு உதவிய மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருமணத்துக்கு புறம்பான உறவு கொலை அல்லது தற்கொலையில் முடிவதை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம். ஒரு மனிதனுக்கு ஏற்படுகின்ற காமம், கோபமும் எதை வேண்டுமானாலும் செய்ய மனிதனை தூண்டிவிடுகிறது. இந்தவகையில் கள்ளக்காதலனை அடைவதற்காக அவரின் மனைவி, மாமியாரை கள்ளக்காதலி கொலை செய்துள்ள கொடூரம் நடந்துள்ளது. முழு விவரம் பின்வருமாறு:- ஆந்திர மாநிலம் கோணசீமா மாவட்டம் ஆல்லாவரம் மண்டலம் கொமரகிரி பட்டணம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மதி செட்டி சுரேஷ், இவர் திருமணத்திற்கு முன்பு அதே ஊரைச் சேர்ந்த நாகலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணத்துக்கு புறம்பான உறவில் ஈடுபட்டு வந்தார்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தனது திருமணத்துக்கு புறம்பான உறவை முறித்துக் கொண்டார். அதன் பின்னர் அதே ஊரைச் சேர்ந்த ஜோதி என்பவரை காதலித்து கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அன்றிலிருந்து நாகலட்சுமி கள்ளக்காதலன் சுரேஷை அவரது மனைவியிடம் இருந்து பிரித்து தான் சுரேசுடன் சேர்ந்து வாழவேண்டும் என முடிவு செய்தார். இதனையடுத்து கணவன் மனைவியை பிரிப்பதற்காக பல்வேறு சதி செயல்களில் ஈடுபட்டார். ஜோதிக்கு வேறு ஒரு ஆணுடன் தகாத உறவு இருப்பதாக கூறி சுரேஷின் வீட்டிற்கு சில ஆண்களை வைத்து கடிதம் எழுத வைத்தார்.
ஆனால் அதை சுரேஷ் நம்பவில்லை, தொடர்ந்து தனது மனைவியை அன்புடன் கவனித்து வந்தார். கணவன் மனைவி இருவரையும் பிரிக்க கள்ளக்காதலி நாகலட்சுமி எவ்வளவோ முயன்றும் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில்தான் மனைவி ஜோதியை தீர்த்துக்கட்ட நாகலட்சுமி முடிவு செய்தார். இந்நிலையில் ஜோதி தனது சொந்த ஊருக்கு சென்றார், இந்த மாதம் இரண்டாம் தேதி தனது தாய் வீட்டில் தனது தாயாருடன் அவர் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு தனது வளர்ப்பு மகள்கள் திவ்யா, சௌஜன்யா, ஹரிதா ஆகியோருடன் வந்த கள்ளக் காதலி நாகஜோதி, ஜோதியின் வீட்டின் மூது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்.

அவர்களின் வீடு தீப்பிடித்து எரிந்தது. வீட்டில் தீ பற்றி எரிவதை கண்ட ஜோதியின் தந்தை அலறியடித்து ஓடி தீயை அணைக்க முயன்றார், ஆனால் அதற்குள்ளாக தீயில் ஜோதியும் அவரது தாயாரும் கருகிவிட்டனர். இதனால் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் திரண்டு அவளின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், நாகலட்சுமி தனது வளர்ப்பு மகளுடன் சேர்ந்து ஜோதியை கொன்றது தெரியவந்தது.
இந்நிலையில் போலீசார் நாகலட்சுமிக்கு உதவிய ஹரிதா, திவ்யா, சௌஜன்யா உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்து ராஜமுந்திரி மத்திய சிறையில் அடைத்தனர். திருமணத்திற்கு முன் கணவன் செய்த விவகாரம், மனைவி மற்றும் அவரது தாயாரின் உயிரை காவு வாங்கிவிட்டதே என ஜோதியின் உறவினர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
