லேடி போலீஸை லவ் டார்ச்சர் பண்ணும் தூக்குத் தண்டனை குற்றவாளி!

*    பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவிடம் ‘திரிசூலம்’ எனும் சக்தி வாய்ந்த ஆயுதம் உள்ளது. அதில் அமலாக்கத்துறை, சி.பி.ஐ. மற்றும் வருமான வரித்துறை என்ற மூன்று முக்கிய அம்சங்கள் உள்ளன. அதைப் பயன்படுத்தியே எதிரிகளை அழிக்கின்றனர். 
-    ஜெய்ராம் ரமேஷ் (மாஜி காங் மத்தியமைச்சர்)

*    பிரதமர் மோடி அமெரிக்கா சென்று அங்கே ‘ஹவ்டி மோடி’ எனும் கூட்டத்தில் பங்கேற்றார். ஆனால், அமெரிக்கா சென்று பணிபுரிய விரும்பும் இந்தியர்களின் ‘ஹெச் 1 பி’ விசாவை அந்நாட்டு அரசு அதிக எண்ணிக்கையில் நிராகரிக்க துவங்கியுள்ளது. அப்படியானால் இந்த ஆட்சியில் உண்மையில் பயன் அடைவது யார்? என்பதை மத்தியரசை பார்த்து கேட்க வேண்டும். 
-    பிரியங்கா காந்தி

*    ஆந்திர முதல்வரான ஜெகன்மோகன் ரெட்டி, குண்டூர் மாவட்டத்தில் உள்ள தனது வீட்டுக்கு 73 லட்சம் ரூபாய் செலவில் புதிய ஜன்னல் மற்றும் கதவுகளை பொருத்தியுள்ளார். இதற்கு சந்திரபாபு நாயுடு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். இது போக ஒன்று புள்ளி எண்பத்து ஒன்பது கோடியில் புதிய ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது பிரச்னையாகிறது.
-    பத்திரிக்கை செய்தி.

*    மதவெறி கூட்டத்துக்கு தமிழ் மண்ணில் அறவே இடமில்லை! என்பது நாம் அறிந்ததே. இது அக்கூட்டத்துக்கும் நன்றாகவே தெரியும். ஆனாலும் இந்த உண்மையை மறைத்து, சில திரிப்பு செய்திகளை உருவாக்கி, பிரசாரம் செய்து வருகின்றனர். என் பெயருக்கு முன்னால் பட்டப் பெயரிடுவதை தவிர்க்கவும். என் நிகழ்ச்சியில் பட்டாசு வெடிப்பதை  நிறுத்தவும், நான் வருவதை மக்களுக்கு அறிவிக்க வேண்டுமென நினைத்தால், ஏழைகளுக்கு உதவுங்கள்.
-    உதயநிதி ஸ்டாலின்

*    இப்போதிலிருந்து 2200 ஆண்டுகளுக்கு முன்னரே வைகை நதிக்கரையில் தமிழர் நாகரிகம் சிறப்பாக இருந்துள்ளது! என்பதை கீழடி அகழாய்வுகள் காட்டுகின்றன. தமிழனின் பெருமையை பாருங்கள்!
-    பாரதிராஜா

*    ரஜினிகாந்த் 44 ஆண்டுகள் திரைத்துறைக்கு பங்காற்றி உள்ளார். நான் 60 ஆண்டுகளாக இந்த துறையில் உள்ளேன். இரண்டு ஆண்டுகளுக்கும் மிகப்பெரிய வித்தியாசமில்லை. ரஜினிக்கு விருது வழங்கிய கட்சிக்கு எனது பாராட்டுகளை தெரிவிக்கிறேன். 

*    வழக்கமாக நவம்பர், டிசமபர் மாதங்களில் வெங்காய விலை அதிகமாகத்தான் இருக்கும். இப்போது பற்றாகுறை காரணமாக தமிழகத்தில் வெங்காயம் விலை உயர்ந்துள்ளது. எங்கள் நடவடிக்கையால் சில நாட்களாக விலை குறைந்துவருகிறது. 2010ல் தி.மு.க. ஆட்சியின் போது வெங்காயம் ஒரு கிலோ 150 வரை விற்றது. 
-    செல்லூர் ராஜூ 

*    கடந்து போன வரலாற்றைப் பார்க்கும்போது கம்யூனிசம், முதலாளித்துவம் போன்ற சித்தாந்தங்கள் வழக்கொழிந்துவிட்டன. பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவுக்கு, மேற்கத்திய பொருளாதார சித்தாந்தங்கள் தேவையில்லை. தன் பொருளாதாரத்தை தானே கட்டமைக்கும் திறன் இந்தியாவுக்கு உள்ளது.
-    ஆடிட்டர் குருமூர்த்தி

*    கோவை ரெட்டை கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியான மனோகரன், தன்னை வழக்கு விசாரணைக்காக கோர்ட்டுக்கு அழைத்துச் சென்ற லேடி போலீஸிடம் ‘நான் உங்களை லவ் பண்றேன்’ என்று தன் கைகளில் காயம் ஏற்படுத்தி டார்ச்சர் செய்திருக்கிறான்.