தனக்கு திருமணம் ஆனதை மறைத்து இளைஞர் ஒருவர் இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியுள்ள சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .  பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ,  பெண்களை காதல் வலையில்  சிக்கவைத்து அவர்களை பாலியல் இச்சைக்காக பயன்படுத்தி அவர்கள் ஏமாற்றப்படும் சம்பவங்களும் ஒருபுறம் நாட்டில் அரங்கேறி வருகிறது .  இதுபோன்ற ஒரு ஏமாற்று சம்பவம் போபாலில் அரங்கேறியுள்ளது .  போபாலில் விடிஷாவை சேர்ந்த 19 வயது பெண் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார் ,  அதில், 

தன்னை இரண்டு ஆண்டுகளாக காதலித்த இளைஞர் தான் கர்ப்பமாக இருப்பது தெரிந்தவுடன் தன்னை ஏமாற்ற பார்க்கிறார் என அதில் கூறியுள்ளார் .  மேலும் அந்தப் புகாரில் தெரிவித்துள்ள அந்தப் பெண் ,  தான் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததாகவும் ,  அப்போது தன்னுடன் பணியாற்றிய சைலேந்திர குஷ்வாஹா என்ற இளைஞர் தம்மை காதலித்ததாகவும், பெற்றோர்களிடம் பேசி பின்னர் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் அந்த இளைஞர்  தெரிவித்ததாகவும் அந்த பெண் கூறியுள்ளார்,  சுமார் ஓராண்டுக்கு மேலாக இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு தனது வீட்டில் சொல்லி தன்னை திருமணம் செய்து கொள்வதாக சொல்லி சைலேந்தர் தன்னுடன் உடலுறவு வைத்துக் கொண்டார் என அந்த பெண் குறிப்பிட்டுள்ளார் . 

அந்த பெண் மேலும் கூறுகையில் அதனை அடுத்து இருவரும் தனியாக வீடு எடுத்து வசித்து வந்த நிலையில் ,  ஒரு வருடத்திற்கும் மேலாக காதலர் சைலேந்தர் தன் பாலியல் இச்சைக்கு தன்னை பயன்படுத்தி வந்தார்,   அடிக்கடி தன்னுடன் உடலுறவு கொண்டதால்  தான் கர்ப்பம் ஆனதாகவும் நான்கு மாத கர்ப்பமாக இருப்பதாக சைலேந்தரிடம்  கூறியதால் தற்போது அவர் என்னை திருமணம் செய்துகொள்ள மறுப்பதுடன் அவர் தலைமறைவாகி விட்டார் எனவும் போலீசில் புகார் கொடுத்துள்ளார் அந்த பெண்.   இந்நிலையில் வழக்குப்பதிவு செய்து விசாரித்த போலீஸ் விசாரணையில்  திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது . ஏமாற்றிய இளைஞர்  ஏற்கனவே திருமணமானவ என்றும் அவர் உடலுறவுக்காக இந்த பெண்ணை காதலித்து அவருடன் உல்லாசம் அனுபவித்து வந்த தும் தெரியவந்துள்ளது. மோசடியில் ஈடுபட்ட இளைஞரை கைது செய்யபோலீசார் தேடி வருகின்றனர்.