மாமா பையனை காலி செய்ய முறைப்பெண் போட்ட பக்கா பிளான்..! 

தனக்கு பிடிக்காத நபருடன் திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்ததால் ஒரு வித்தியாசமான முடிவெடுத்து செயல்படுத்தியுள்ளார் பெண்.இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ளது ஊத்தங்கரை என்ற பகுதி. இங்கு உள்ள சென்னப்பநாயக்கனூர் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர்கள் கோவிந்தராஜன் குடும்பத்தினர். கோவிந்தராஜனுக்கு ஜான்சி ராணி என்ற மகள் உள்ளார்.

ஜான்சிராணிக்கும் அவரது அத்தை மகனான சரவணனுக்கும் திருமணம் செய்து வைக்க சில மாதங்களுக்கு முன்பு முடிவு செய்து உள்ளனர். இதற்கிடையில் கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்த ஜான்சி, இன்னொரு நபரை காதலித்து வந்ததாக தெரிகிறது. இது தெரிய வரவே எதிர்ப்பு கிளம்பியதும் என்ன செய்வது என்று தெரியாமல் மிகுந்த யோசனையில் ஆழ்ந்த ஜான்சி திட்டவட்டமாக ஒரு முடிவு எடுத்துள்ளார். அதன்படி கடந்த சனிக்கிழமை அன்று அவரது ஊரில் திருவிழா நடந்துள்ள சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வீட்டில் யாரும் இல்லாத சமயமாக பார்த்து சரவணனை ஜான்சிராணி அழைத்து உள்ளார்.

அப்போது ஜூஸில் மயக்க மருந்து கலந்து சரவணனுக்கு கொடுத்து மயக்கம் அடைய செய்து தன் காதலனுடன் சேர்ந்துகொண்டு சரவணனை தாக்கியுள்ளார். பின்னர் வீடு திரும்பிய உறவினர்கள் சரவணன் மயக்க நிலையில் கீழே விழுந்திருந்ததை பார்த்து அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.

பின்னர் மயக்கம் தெளிந்த பின்னர் நடந்த உண்மைகளை தெரிவித்துள்ளார் சரவணன். ஜான்சி ராணியின் இந்த செயலால் உறவினர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.