பெரும்பாக்கம் ஏரியில் மிதந்த இளம்பெண் சடலம்..! பிங்க் கலர் ஆடையில் ..யார் இந்த பெண்..! 

சென்னை சிறுசேரி அடுத்துள்ள பெரும்பாக்கம் ஏரியில் ஓர் இளம் பெண்ணின் சடலம் மிதந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம்மாவட்டம் சிறுசேரி அடுத்து உள்ள இந்த ஏரியில் ஓர் இளம் பெண்ணின் சடலம் மிதப்பதாக அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு புகார் அளித்துள்ளனர். விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தி சோதனை செய்ததில் கை கால்கள் நைலான் கயிற்றால் கட்டப்பட்ட நிலையிலும், கழுத்தில் காயங்களுடனும் பெண் சடலம் இருந்து உள்ளது. இதனால் யாரேனும் கொலை செய்து ஏரியில் வீசி சென்று இருக்கக்கூடும் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

அவர் அணிந்திருந்த பிங்க் நிற ஆடை புதியதாக இருப்பதாகவும், நைலான் கொண்டு கை கால்கள் கட்டப்பட்டு உள்ளதாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர். எனவே நைலான் கயிற்றை  கொண்டு கழுத்தை நெரித்து கொலை செய்திருக்க வாய்ப்பு உள்ளது என்றும் சடலத்தை பார்க்கும்போது இரண்டு நாட்களுக்கு முன்பாக தான் இந்த நிகழ்வு நடந்திருக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் அனைத்து காவல் நிலையத்துக்கும் சமீபத்தில் பெண் யாராவது காணாமல் போயுள்ள புகார் எழுந்துள்ளதா? அல்லது அப்பகுதியில் இருக்கக்கூடிய ஐடி நிறுவனத்தில் வேலை செய்யக்கூடிய பெண்ணா என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.