ஏற்கனவே இரண்டு திருமணம் செய்துக்கொண்ட பெண் ஒருவர் தற்போது 17 வயது சிறுவனை அழைத்துக்கொண்டு ஓடிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை, கீழ்ப்பாக்கம் பகுதியில் வசித்து வரும் ஸ்வேதா என்பவர், ஏற்கனவே  திருமணமாகி ஒரு குழந்தை பெற்று உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக முருகன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டு உள்ளார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. 

முருகன் தற்போது பெங்களூருவில் வேலை செய்து வருகிறார். கடந்த மாதம் பெங்களூரு சென்ற ஸ்வேதா முருகனிடம் இரண்டு குழந்தைகளையும் ஒப்படைத்து விட்டு வந்துள்ளார். இந்த நிலையில் தான், இவர் இடைப்பட்ட ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது உறவினரை பார்க்க சென்ற போது அதே வார்டில் இருந்த பிரசாத் என்பவரின் மகனுக்கும் பழக்கம் ஏற்பட்டு உள்ளது

இவர்கள் இருவரும் தங்களது மொபைல் எண்ணை பரிமாறிக்கொண்டு சில நாட்களாக பேசி வந்து உள்ளனர். ஒரு கட்டத்தில் இருவரும் காதல் செய்வதாக கூறி பழகி வந்துள்ளனர். அப்போது தான், தன்னுடைய இரு குழந்தைகளையும் முருகனிடம் ஒப்படைத்து விட்டுள்ளார் இவர். முதல் குழந்தையை முதல் கணவரே வளர்த்து வருகிறார்....

இந்த நிலையில் திடீரென 17 வயது சிறுவனை அழைத்துக் கொண்டு, மாயமாகி உள்ளார் ஸ்வேதா. இது குறித்து பிரசாத் கொடுத்த புகாரின் அடிப்படையில், பெற்ற குழந்தைகள் மீது பாசம் கூட இல்லாமல், முதல் திருமணத்தை விவாகரத்து கூட செய்யாமல் இது போன்று நடந்து உள்ள ஸ்வேதா மீது போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து உள்ளனர்.