இதையடுத்து அவர்கள் இருவரும்  திருமணம் செய்து கொள்ளாமலேயே வீடு வாடகைக்கு எடுத்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதற்கிடையே டிக் டாக் செயலி மூலம் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த  குமார் என்பவருக்கும் மல்லிகாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் மனோகரனை விட்டுவிட்டு குமாரை காதலிக்கத் தொடங்கியுள்ளார்.. இது எப்படியோ மனோகரனுக்குத் தெரிய வர  அவர் தனது காதலியுடன் தகராறு செய்துள்ளார்.

இந்நிலையில் குமாருடன் உல்லாசமாக இருப்பதற்காக மல்லிகா நாமக்கல் சென்றுள்ளார். அங்கு மல்லிகாவும் குமாரும் ஒருவரை ஒருவர் சந்தித்து  உல்லாசமாக இருந்துள்ளனர்.
இதனைத் தெரிந்து கொண்ட மனோகரன் நாமக்கல் சென்று குமாரிடம் இருந்த மல்லிகாவை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.

அப்போது மல்லிகாவுக்கும் மனோகரனுக்கும் இடையே வாக்குவாதம் செய்தனர்.இதனால் ஆத்திரம் அடைந்த திருவாரூர் காதலன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்த மாணவியை குத்தினார். 

இதில் காதலி ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதனால் பயந்து போன திருவாரூர் காதலன் எலிமருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். தற்போது மல்லிகா  திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் மனோகரன்  மன்னார்குடி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதை அடுத்து டிக் டாக் செயலியில் அறிமுகம் ஆன குமார் பயந்து தன்னுடைய செல்போனில் இருந்த டிக் டாக் செயலியை எடுத்துவிட்டு தலைமறைவாகிவிட்டார். இது குறித்து போலீசார் தொடர்நது விசாரணை நடத்தி வருகின்றனர்.