திருமணமான சில நிமிடத்திலேயே புதுப்பெண் 5 மாத கர்ப்பமாக இருந்த சம்பவம்  மாப்பிள்ளை வீட்டாரை அதிர்ச்சியடைய  வைத்துள்ளது.   மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பிர்பும் என்ற கிராமத்தில் உள்ள இளைஞர் ஒருவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும்  கடந்த 24 ஆம் தேதி திருமண நடைபெற்றது.  கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டு மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டார் உறவினர்கள் புடைசூழ வந்து திருமணத்தை நடத்தி வைத்தனர் ,  தாலி கட்டிய பின்னர் திருமணத்திற்கான சடங்குகள் நடந்து கொண்டிருந்தது அப்போது புதுப்பெண் மனம் மேடையிலேயே வாந்தி எடுக்க ஆரம்பித்தார். 

அவருக்கு தலைச்சுற்றல் , மயக்கம் ஏற்பட்டதால் அதிர்ச்சி அடைந்த இரு குடும்பத்தினரும் பதறியடித்து அந்தப் பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் அந்த பெண்ணை பரிசோதித்த டாக்டர்கள் அப்பெண் 5 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறினர் .  அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாப்பிள்ளை வீட்டார் ஏற்கனவே கர்ப்பமாக்கி உள்ள பெண்ணை எங்கள் மகன் தலையில் கட்ட பார்க்கிறீர்களா எனக்கூறி பெண் வீட்டாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் .  அந்தப் பெண்ணை தங்கள் மருமகளாக ஏற்றுக்கொள்ள முடியாது என  தகராறில் ஈடுபட்டனர் இதனால்  போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.

 

அதில் அந்தப் பெண் ஏற்கனவே ஒரு இளைஞரை காதலித்து வந்ததாகவும் , அவருடன் நெருங்கி பழகி வந்த நிலையில் தான் புத்தகமாக்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார் .  இத்திருமணத்தில்  தனக்கு விருப்பமில்லை என பெற்றோர்களிடம் தெரிவித்த பின்னரும் கட்டாயப்படுத்தி இத்திருமணத்தை நடத்தி  வைத்ததாக போலீசாரிடம்  அந்தப்  பெண் தெரிவித்தார் .  ஏற்கனவே ஒருவருடன் பழகி கர்ப்பமாகிய நிலையில் மற்றொருவரிடம் பெண் தாலிக்கட்டிக்கொண்ட சம்பவம்  அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.