பொண்டாட்டி "அதுக்கு" ஓகே சொல்லன்னு டைவர்ஸ் கேட்ட கணவர்..! கல்யாணமாகி 16 ஆண்டு பிறகு வந்த அதிசய ஆசை..! 

தாம்பத்ய உறவுக்கு மனைவி ஒத்துழைக்க வில்லை என கூறி  திருமணம் முடிந்து 16 ஆன்டுகள் கழித்து வித்தியாசமான காரணத்தை கூறி விவாகரத்து கேட்டு நீதி மன்றத்தை நாடி உள்ள சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த குணா மற்றும் வனிதா தம்பதியினர் 1997 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு இவர்களுக்கு 1999 ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. 

இந்த ஒரு நிலையில் "எனது மனைவி தாம்பத்திய உறவுக்கு ஒத்துழைக்கவில்லை என ஒரு நொண்டி சாக்கு கூறி விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தை அணுகியுள்ளார் குணா. இவருக்கு பதில் மனு தாக்கல் செய்யும் விதமாக, இவரது மனைவி வனிதா விளக்கம் அளித்துள்ளா.ர் அதில், " என் கணவர் கூறிய காரணம் சரியானது இல்லை. அவருக்கும் அவருடைய அத்தை மகளுக்கும் தவறான தொடர்பு ஏற்பட்டு உள்ளதால் இது போன்று பொய்யான காரணத்தைக் கூறி விவாகரத்து கேட்டு வருகிறார். அதுமட்டுமல்லாமல் மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கிறார். எனவே அவருக்கு பிடிக்கவில்லை என்றால் எனக்கும் என் மகளுக்கும் மாதம் ரூ. 30 ஆயிரம் கொடுத்து உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பராமரிப்பு செலவுக்காக மாதம் 7,500 ரூபாய் வழங்க வேண்டும் என  தெரிவித்து இருந்தனர். இந்த உத்தரவை ஏற்க மறுத்து மேல்முறையீடு செய்யும் விதமாக உயர் நீதிமன்றத்தை அணுகினார் குணா. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், "திருமணமாகி 16 ஆண்டுகள் ஆகிவிட்டது. தற்போது திருமண வயதில் ஒரு பெண்ணும் இருக்கின்றார். இந்த ஒரு தருணத்தில் தாம்பத்திய உறவை காரணம் காட்டி விவாகரத்து கேட்பது தவறான ஒன்று... ஒருவேளை இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் திருமணம் ஆன சில ஆண்டுகளில் விவாகரத்து கேட்டு இருக்கலாம். ஆனால் 16 வருடங்கள் பின்பு இப்படி ஒரு காரணத்தைக் காட்டி விவாகரத்து கேட்டிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது உயர்நீதிமன்றம்